தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1765

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 32

கப்ரை, காரையால் பூசுவதற்கும், அதன் மீது கட்டடம் எழுப்புவதற்கும் தடை.

 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது உட்காருவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அத்தியாயம்: 11

(முஸ்லிம்: 1765)

32 – بَابُ النَّهْيِ عَنْ تَجْصِيصِ الْقَبْرِ وَالْبِنَاءِ عَلَيْهِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ

«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ»

– وحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، جَمِيعًا عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ


Muslim-Tamil-1765.
Muslim-TamilMisc-1610.
Muslim-Shamila-970.
Muslim-Alamiah-1610.
Muslim-JawamiulKalim-1616.




  • இந்த செய்தியை இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத், அப்துர்ரஸ்ஸாக், ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் ஆகியோர் கப்ரின் மீது எழுதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற வாசகத்தை அறிவிக்கவில்லை. இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத் சொல்லுக்கே முன்னுரிமை உள்ளது.
  • இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூமுஆவியா (முஹம்மது பின் காஸிம்), முஹம்மது பின் ரபீஆ ஆகியோர் மட்டுமே கப்ரின் மீது எழுதுவது தடை என்ற வாசகத்தைக் கூடுதலாக அறிவித்துள்ளனர். அபூமுஆவியா, அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிப்பதில் சரியாக அறிவிப்பவர்; மற்றவர்களிடமிருந்து அறிவிப்பதில் தவறு செய்பவர்; சரியாக மனனம் செய்திருக்க மாட்டார் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் விமர்சித்துள்ளார். (அல்இலல்-1/119)
  • முஹம்மது பின் ரபீஆ அவர்கள் அறிவிக்கும் செய்தியில் வரும் அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் என்பவர் அறியப்படாதவர் என்று கூறி அதை சிலர் பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்று கூறுகின்றனர்.
  • ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் அவர்கள் வழியாக இருவகை செய்திகளும் வந்திருந்தாலும் கப்ரின் மீது எழுதுவது பற்றி கூறாத அறிவிப்பாளர்தொடரே மிக பலமாக உள்ளது.
  • ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள், கப்ரின் மீது எழுதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற செய்தியை சரியானது என்று ஏற்றுக்கொண்டாலும் இது செயலில் இல்லை; கிழக்கு முதல் மேற்குவரை உள்ள முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    தலைவர்களின் பெயர்கள் கப்ரில் எழுதப்பட்டுள்ளது. இதை பின்வந்தவர்கள், முன்சென்றவர்களிடமிருந்து பெற்றிருப்பார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இந்தக் கருத்தை மறுத்து நபித்தோழர்களில் யாரும் இவ்வாறு செய்யவில்லை. இந்த தடைப் பற்றி தெரியாத சில தாபிஈன்களோ அல்லது அவர்களுக்கு பின் வந்தவர்களோ இதை உருவாக்கிவிட்டனர் என்று பதில் கூறியுள்ளார்…

(நூல்: முக்தஸர் தல்கீஸுத் தஹபீ-1/291, இர்வாஉல் ஃகலீல்-757)

1 . இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6488 , முஸன்னஃப் இப்னு அபீஷைபா-11742 , 11764 , 11779 , அஹ்மத்-14148 ,1456514647 , முஸ்லிம்-1765 , இப்னு மாஜா-1562 , அபூதாவூத்-32253226 , திர்மிதீ-1052 , குப்ரா நஸாயீ-2165 , 2166 , 2167 , நஸாயீ-2027 , 20282029 , ஷரஹ் மஆனில் ஆஸார்-2945 , 2946 , இப்னு ஹிப்பான்-3162 , 3163 , 3164 , 3165 , ஹாகிம்-1369 , 1370 , குப்ரா பைஹகீ-6735 , 6762 , 6763 ,

  • அபுஸ்ஸுபைர் —> ஸுலைமான் பின் முஸா

பார்க்க: இப்னு ஹிப்பான்- 3164 , குப்ரா பைஹகீ-6735 ,

  • ஸுலைமான் பின் முஸா —> ஜாபிர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீஷைபா-11742 , அஹ்மத்- 14149 , இப்னு மாஜா-1563 , அபூதாவூத்-3226 , குப்ரா நஸாயீ-2165 , நஸாயீ-2027 , குப்ரா பைஹகீ-6763 ,

  • ஸுலைமான் பின் முஸா —> அதாஉ பின் அபூரபாஹ்—> ஜாபிர் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7699 ,

  • கதாதா —> ஸுலைமான் பின் கைஸ் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8413 ,

  • அஷ்அஸ் —> ஹஸன் பஸரீ —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5983 ,

  • நஸ்ர் பின் ராஷித் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1905 , ஷரஹ் மஆனில் ஆஸார்-2947 ,

  • நஸ்ர் பின் ராஷித் —> ஒரு மனிதர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-15286 ,

2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1564 .

3 . உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-26555 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1768 , முஸ்லிம்-1764 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.