தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2755

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். – இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு கூடுதலாக இடம்பெற்றுள்ளது:

இந்த ஹதீஸை நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் இல்லாத (ஹலால்) நிலையிலேயே திருமணம் செய்தார்கள்” என யஸீத் பின் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் என்றார்கள்.

Book : 16

(முஸ்லிம்: 2755)

وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ، وَإِسْحَاقُ الْحَنْظَلِيُّ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ ابْنُ نُمَيْرٍ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ»، “

زَادَ ابْنُ نُمَيْرٍ، فَحَدَّثْتُ بِهِ الزُّهْرِيَّ، فَقَالَ: أَخْبَرَنِي يَزِيدُ بْنُ الْأَصَمِّ، أَنَّهُ نَكَحَهَا وَهُوَ حَلَالٌ


Tamil-2755
Shamila-1410
JawamiulKalim-2535




  • இந்தச் செய்தியில் இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அவர்கள் வழியாக யஸீத் பின் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறும் கருத்தே சரியானதாகும்.

மேலும் பார்க்க: புகாரி-1837 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.