தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5699

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “நாம் ஏழை முஹாஜிர்கள் இல்லையா?”என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “நீர் அமைதி காண உமக்கு மனைவி இல்லையா?”என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “ஆம் (இருக்கிறாள்)” என்றார்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “வசிப்பதற்கு உமக்கு வீடு இல்லையா?” என்று கேட்டார்கள். அந்த மனிதர் “ஆம் (இருக்கிறது)” என்றார். “அவ்வாறாயின், நீர் செல்வர்களில் ஒருவராவீர்” என்று கூறினார்கள். அந்த மனிதர் “இத்துடன் என்னிடம் பணியாளர் ஒரு வரும் இருக்கிறார்” என்றார். “அவ்வாறாயின், நீர் மன்னர்களில் ஒருவர் ஆவீர்” என்றார்கள்.

– அபூஅப்திர்ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் மூன்று பேர் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் நானும் இருந்தேன். அவர்கள் (மூவரும்), “அபூமுஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கு எந்தப் பொருள்மீதும் சக்தி இல்லை. எங்களிடம் செலவழிப்பதற்கு வசதியோ, வாகனமோ, தேவையான வீட்டுப்பொருட்களோ இல்லை” என்று கூறினர்.

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “நீங்கள் எதை நாடுகிறீர்கள் (உங்களுக்கு என்ன வேண்டும்)? நீங்கள் விரும்பினால், எம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு அல்லாஹ் எளிதாக்கியுள்ள செல்வத்தை வழங்குவோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பிரச்சினையை நாம் அரசரிடம் தெரிவிப்போம். நீங்கள் விரும்பினால், பொறுமையாக இருக்கலாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஏழை முஹாஜிர்கள் மறுமைநாளில் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்” என்று கூறியதைக் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அதற்கு அவர்கள் (மூவரும்), “அப்படியானால், நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்; எதையும் கேட்கமாட்டோம்”என்று கூறினர்.

Book : 53

(முஸ்லிம்: 5699)

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو هَانِئٍ، سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ، يَقُولُ

سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ وَسَأَلَهُ رَجُلٌ، فَقَالَ: أَلَسْنَا مِنْ فُقَرَاءِ الْمُهَاجِرِينَ؟ فَقَالَ لَهُ عَبْدُ اللهِ: «أَلَكَ امْرَأَةٌ تَأْوِي إِلَيْهَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «أَلَكَ مَسْكَنٌ تَسْكُنُهُ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَأَنْتَ مِنَ الْأَغْنِيَاءِ»، قَالَ: فَإِنَّ لِي خَادِمًا، قَالَ: «فَأَنْتَ مِنَ الْمُلُوكِ»

– قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: وَجَاءَ ثَلَاثَةُ نَفَرٍ إِلَى عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، وَأَنَا عِنْدَهُ، فَقَالُوا: يَا أَبَا مُحَمَّدٍ إِنَّا، وَاللهِ مَا نَقْدِرُ عَلَى شَيْءٍ، لَا نَفَقَةٍ، وَلَا دَابَّةٍ، وَلَا مَتَاعٍ، فَقَالَ لَهُمْ: مَا شِئْتُمْ، إِنْ شِئْتُمْ رَجَعْتُمْ إِلَيْنَا فَأَعْطَيْنَاكُمْ مَا يَسَّرَ اللهُ لَكُمْ، وَإِنْ شِئْتُمْ ذَكَرْنَا أَمْرَكُمْ لِلسُّلْطَانِ، وَإِنْ شِئْتُمْ صَبَرْتُمْ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ يَسْبِقُونَ الْأَغْنِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ إِلَى الْجَنَّةِ، بِأَرْبَعِينَ خَرِيفًا» قَالُوا: فَإِنَّا نَصْبِرُ، لَا نَسْأَلُ شَيْئًا


Muslim-Tamil-5699.
Muslim-TamilMisc-7654.
Muslim-Shamila-2979.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-5294,
5295.




  • இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் சிலவற்றில் ஏழை முஹாஜிர்கள் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள் என்று வந்துள்ளது.
  • சிலவற்றில் ஐநூறு வருடங்களுக்கு முன்பே ஏழைகள் சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள் என்று வந்துள்ளது.

இரண்டு வகையான செய்திகளையும் சரி என்று கூறக்கூடியவர்கள் இவை ஏழைகள், பணக்காரர்களின் நிலைகளைக் கவனித்து கூறப்பட்டுள்ளது.

1 . சில பணக்காரர்களை விட சில ஏழைகள் 40 வருடத்திற்கு முன்பாக சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள். (இவர்கள் ஹிஜ்ரத் செய்த ஏழைகள், பணக்காரர்கள் ஆவர்) 

2 . வேறு சில பணக்காரர்களை விட வேறு சில ஏழைகள் ஐநூறு வருடங்களுக்கு முன்பாக சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள் என்று விளக்கம் கூறுகின்றனர். (இவர்கள் மற்ற ஏழைகள் பணக்காரர்கள் ஆவர்) 

வேறு சிலர் ராவீ-41980-முஹம்மத் பின் அம்ரின் அறிவிப்பான ஐநூறு வருடங்கள் என்ற செய்தியை பலவீனமானது என்று கூறுகின்றனர்.

முஹம்மத் பின் அம்ர் அவர்களின் சில குறிப்பிட்ட ஹதீஸ்களில் தான் தவறு உள்ளது என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் இவரை ஹஸன் தரம்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளனர்.

(பார்க்க தமிழ் குறிப்பு: திர்மிதீ-2307 , அரபு குறிப்பு: முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா)

மேற்கண்ட செய்தியை இவர் மட்டும் தனித்து அறிவிக்கவில்லை. வேறு சிலரும் அறிவித்துள்ளனர் என்பதால் இந்த செய்தி ஸஹீஹுன் லிஃகைரிஹீ ஆகும்.


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2353 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.