தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-608

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

பெருந்துடக்கு போன்ற நிலைகளில் அல்லாஹ்வை திக்ர் செய்தல் (துதித்தல்).

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை திக்ர் செய்பவர்களாய் இருந்தார்கள்.

இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 3

(முஸ்லிம்: 608)

30 – بَابُ ذِكْرِ اللهِ تَعَالَى فِي حَالِ الْجَنَابَةِ وَغَيْرِهَا

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، وَإِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ، عَنِ الْبَهِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ»


Muslim-Tamil-608.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-373.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-563.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24410 , 25200 , 26376 , முஸ்லிம்-608 , இப்னு மாஜா-302 , அபூதாவூத்-18 , திர்மிதீ-3384 , …

  • ஸகரிய்யா பின் அபூஸாயிதாவிடமிருந்து அறிவிக்கும் அவரது மகன் யஹ்யா பின் ஸகரிய்யாவும், வலீது பின் காஸிம் அவர்களும் மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரையும், ஹதீஸின் கருத்தையும் அறிவித்துள்ளனர்; ஆனால் ஸகரிய்யா பின் அபூஸாயிதாவிடமிருந்து அறிவிக்கும் ஹஸன் பின் ஹபீப் என்பவர் —> இப்ராஹீம் நகயீ —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது யாதல் ஜலால்-மகத்துமிக்க இறைவனே என்று கூறுவார்கள் என்ற கருத்தை அறிவித்துள்ளார். (நூல்: அமலுல் யவ்மி வல்லைலதி லிஇப்னி சன்னீ-19) இந்த அறிவிப்பாளர்தொடரில் இப்ராஹீம் நகயீ அவர்களுக்கும், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களுக்குமிடையில் ஒருவரை நீக்கிவிட்டார். எனவே இது சரியான அறிவிப்பாளர்தொடர் அல்ல. யஹ்யா பின் ஸகரிய்யாவும், வலீது பின் காஸிம் அவர்களும் அறிவிக்கும் செய்தியே சரியானது என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-3569)

  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இந்த செய்தியை அறிவிப்பாளர்தொடரின்றி கூறியுள்ளார். (பார்க்க: புகாரி-305 , 634 ); மேலும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இந்த செய்தியை சரியானது என்று கூறியதாக திர்மிதீ இமாம் கூறியுள்ளார்.

(நூல்: இலலுத் திர்மிதீ-669)

  • இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தி பற்றி அபூஸுர்ஆ அவர்களிடம் விளக்கம் கேட்டார். அதற்கவர் இந்த செய்தி அந்தளவிற்கு (பலமானதாக) இல்லை. இது ஒரு அறிவிப்பாளர்தொடரில் தான் வந்துள்ளது என்று பதிலளித்துள்ளார். இந்த கருத்தை தனது தந்தை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களிடம் கூறி விளக்கம் கேட்டபோது, அவர் “என்னுடைய கருத்து இந்த ஹதீஸின் படி எல்லா நிலையிலும்-அதாவது கழிவறை செல்லும் போதும், மற்ற நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும் என்பதே என்று பதில் கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-124)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.