தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-832

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42

ருகூஉவிலும் சஜ்தாவிலும் ஓத வேண்டியவை.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 4

(முஸ்லிம்: 832)

42 – بَابُ مَا يُقَالُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ

وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَعَمْرُو بْنُ سَوَّادٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، أَنَّهُ سَمِعَ أَبَا صَالِحٍ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ، وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الدُّعَاءَ»


Tamil-832
Shamila-482
JawamiulKalim-749




3 comments on Muslim-832

  1. இந்த முறை நபி (ஸல் ) பர்லானா தொழுல்கையூல் ஸஜ்தா வில் துவா செய்ய சொன்னார்களா இல்லை சுன்னத்தான தொலுகை யிலா

    1. விளக்கம் தரவும். இமாம் பர்லு தொழுகையுள் இதை நான் செய்யலாமா?

      1. அஸ்ஸலாமு அலைக்கும்.

        மேற்கண்ட செய்தியில் சஜ்தாவிலிருக்கும் போது என்று பொதுவாகவே கூறப்பட்டுள்ளது. எனவே இது அனைத்து தொழுகைக்கும் பொருந்தும். இமாமாக இருப்பவர் சுருக்கித் தொழவேண்டும் என்றிருப்பதால் அவரைப் பின்பற்றக் கூடியவர்கள் அந்த நேரத்திற்குள் தஸ்பீஹ், துஆக்களை செய்துக்கொள்ளலாம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.