தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12957

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களை சந்திப்பவர்களாக இருந்தார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்களின் மூலமாக ஒரு மகன் இருந்தார். அவர் அபூ உமைர் என்று அழைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தமாஷ் செய்வார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அபூ உமைரிடம் வந்த போது அபூ உமைர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து அபூ உமைரை கவலையுடன் பார்க்கிறேனே என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அவர் விளையாடிக்கொண்டிருந்த அவரது குருவி இறந்துவிட்டது என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (அபூ உமைரிடம்) அபூ உமைரே உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

(முஸ்னது அஹமது: 12957)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْخُلُ عَلَى أُمِّ سُلَيْمٍ وَلَهَا ابْنٌ مِنْ أَبِي طَلْحَةَ يُكْنَى أَبَا عُمَيْرٍ، وَكَانَ يُمَازِحُهُ، فَدَخَلَ عَلَيْهِ فَرَآهُ حَزِينًا، فَقَالَ: «مَالِي أَرَى أَبَا عُمَيْرٍ حَزِينًا؟» فَقَالُوا: مَاتَ نُغَرُهُ الَّذِي كَانَ يَلْعَبُ بِهِ، قَالَ: فَجَعَلَ يَقُولُ: «أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-12389.
Musnad-Ahmad-Shamila-12957.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12712.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.