தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17142

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டு எங்கள் கண்கள் கண்ணீரைச் சிந்தின; (எங்கள்) உள்ளங்கள் எல்லாம் அஞ்சி நடுங்கின. அப்போது நாங்கள் “இது விடைபெற்றுச் செல்லும் ஒருவர் கூறும் அறிவுரை போன்றுள்ளது. அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எங்களிடம் இறுதி விருப்பமாக என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உங்களை வெண்மையான வழியில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.

உங்களில் எனக்குப் பின்னால் வாழ்பவர்கள் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பர். (மார்க்க அடிப்படையற்ற) இவ்விஷயங்களை சந்திக்கும் உங்களில் ஒருவர் எனது வழிமுறையையும் நல்வழி காட்டப்பெற்ற நேர்வழி கலீஃபாக்களின் வழிமுறையையும் கடைப்பிடிக்கட்டும்.

கறுப்பு நிற (நீக்ரோ) அடிமை உங்களுக்கு ஆட்சியாளராக ஆக்கப்பட்டாலும் அவருடைய சொல்லைச் செவியேற்று அதற்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும், (அவரின் கட்டளையை) கடைவாய்ப் பற்களால் இறுகப் பற்றிக்கொள்ளுமாறும் உங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்.

ஏனெனில் இறைநம்பிக்கையாளர் என்பவர், (சத்தியத்துக்கு கட்டுப்படுவதில்) செலுத்தப்படும் இடம் நோக்கி (செம்மையாகச்) செல்லும், கடிவாளமுள்ள ஒட்டகத்தைப் போன்றவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அம்ர் (ரஹ்)

(முஸ்னது அஹமது: 17142)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ صَالِحٍ، عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ، أَنَّهُ سَمِعَ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، قَالَ:

وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ، فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا؟ قَالَ: «قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ، وَمَنْ يَعِشْ مِنْكُمْ، فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ،

وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ،

فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا انْقِيدَ انْقَادَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-16519.
Musnad-Ahmad-Shamila-17142.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16811.




حديث صحيح بطرقه وشواهده، وهذا إسناد حسن، عبد الرحمن بن عمرو السلمي روى عنه جمع …

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22136-அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அஸ்ஸுலமீ என்பவர் அறியப்படாதவர் என இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
    இறப்பு ஹிஜ்ரி 628
    வயது: 66
    கூறியுள்ளார்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸாலிஹ் அவர்கள், இவர் தாபிஈ என்றும் அறியப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.
  • இராகீ அவர்கள், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார் (என்பதுடன்) இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுவிட்டு, இவர் அறியப்பட்டவர்; இப்னுல் கத்தான் அல்ஃபாஸியின் விமர்சனம் தவறு என்று கூறியுள்ளார். பிரபலமான சிலர்களைக் கூட இப்னுல் கத்தான் அல்ஃபாஸி அவர்கள், அறியப்படாதவர் என்று கூறியுள்ளார்; இவரைப் போன்றே இப்னு ஹஸ்மும் கூறியுள்ளார் என்று இப்னுஹஜர் அவர்கள் குறிப்பிட்டுவிட்டு இவர்களின் விமர்சனத்தின்படி முடிவு செய்யக்கூடாது என்று விமர்சித்துள்ளார்.
  • முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம், அபூஸுர்ஆ-திமிஷ்கீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 281
    ஆகியோர் இவரை ஷாம்நாட்டின் மூத்த தாபிஈன்களில் ஒருவராக குறிப்பிட்டுள்ளனர். எனவே தான் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: அல்இஸாபா-8/356, தாரீகு அபூஸுர்ஆ, பக்கம்-606, அல்காஷிஃப்-3/272, தஹ்தீபுத் தஹ்தீப்-2/537)

  • இந்தச் செய்தியின் இறுதிப் பகுதியை ராவீ-44835-முஆவியா பின் ஸாலிஹ் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். இவரை சிலர் பலமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். இவரின் சில தவறுகளினால் தான் சிலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/145, தஹ்தீபுல் கமால்-28/186, தஹ்தீபுத் தஹ்தீப்-4/108 )

குறிப்பாக இவர் ஷாம்வாசிகளிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் இது அதிகமாக உள்ளது. மேற்கண்ட செய்தியின் இறுதிப்பகுதியை முஆவியா பின் ஸாலிஹ் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ் அல்மிஸரீ அவர்களும், மற்றவர்களும் கூறியுள்ளதாக இப்னு ரஜப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: ஜாமிஉல் உலூம்-2/110)

எனவே இந்தச் செய்தியின் இறுதிப் பகுதியை தவிர மற்றவை சரியானதாகும்.

  • இந்தச் செய்தியை இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அறிவித்திருப்பதைப் போன்றே (பலர் அறிவித்துள்ளனர். அவர்களில்) ஷாம்நாட்டைச் சேர்ந்த மூன்று பலமான தாபிஈன்கள் அறிவித்துள்ளனர் என்று ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    இமாம் கூறியுள்ளார்.

அவர்களைப் பற்றிய விவரம்:

1 . ஹுஜ்ர் பின் ஹுஜ்ர், 2 . யஹ்யா பின் அபுல்முதாஃ,  3 . மஃ-பத் பின் அப்துல்லாஹ். (என்றாலும் மஃ-பதின் அறிவிப்பு ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
நூலின் நிபந்தனைக்குட்பட்டதல்ல என்பதால் இதை நான் விட்டுவிட்டேன் என்று ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம் கூறியுள்ளார்)

இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளவர்கள் பற்றிய விவரம்:

1 . இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அறிவித்துள்ளார். (இவரிடமிருந்து 4 பேர் அறிவித்துள்ளனர்)

1 . யஹ்யா பின் ஜாபிர், 2 . அவ்ஃப் அல்அஃராபீ, 3 . காலித் பின் மஃதான். 4 . ளம்ரா பின் ஹபீப் அல்ஹிம்ஸீ

யஹ்யா பின் ஜாபிர்..

பார்க்க: இப்னு அபூஆஸிம்-, இப்னு வள்ளாஹ்-, அல்முஃஜமுல் கபீர்-,

அவ்ஃப் அல்அஃராபீ

பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-,

காலித் பின் மஃதான். (இவரிடமிருந்து 6 வகையான அறிவிப்பாளர்தொடர் வந்துள்ளது)

1 . காலித் பின் மஃதான் —> அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அஸ்ஸுலமீ —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

மிகச்சரியானது..

2 . காலித் பின் மஃதான் —> அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அஸ்ஸுலமீ, ஹுஜ்ர் பின் ஹுஜ்ர் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

மிகச்சரியானது..

3 . காலித் பின் மஃதான் —> இப்னு அபூபிலால் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

சரியானது..

மூன்று மட்டுமே சரியானது.

4 . காலித் பின் மஃதான் —> தந்தையின் சகோதரர் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பலவீனம்..

5 . காலித் பின் மஃதான் —> ஜுபைர் பின் நுஃபைர் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பலவீனம்..

6 . காலித் பின் மஃதான் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பலவீனம்..

ளம்ரா பின் ஹபீப் அல்ஹிம்ஸீ

2 . இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமிருந்து ஹுஜ்ர் பின் ஹுஜ்ர் அறிவித்துள்ளார்.

3 . இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமிருந்து யஹ்யா பின் அபுல்முதாஃ அறிவித்துள்ளார்.

இவரிடமிருந்து அப்துல்லாஹ் பின் அலா என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார்

4 . இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபூபிலால் அறிவித்துள்ளார்.

5 . இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமிருந்து மஃ-பத் பின் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.

6 . இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமிருந்து முஹாஸிர் பின் ஹபீப் அறிவித்துள்ளார்.

இந்தக் கருத்தில் இர்பாள் பின் ஸாரியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அஸ்ஸுலமீ —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பார்க்க: அஹ்மத்-17142 , 17144 , 17145 , தாரிமீ-96 , இப்னு மாஜா-42 , 43 , அபூதாவூத்-4607 , திர்மிதீ-2676 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-5 , அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-329 , 330 , 331 , 332 , குப்ரா பைஹகீ-20338 ,

  • அப்துல்லாஹ் பின் அலா —> யஹ்யா பின் அபுல்முதாஃ —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-42 , முஸ்னத் பஸ்ஸார்-4201 , அல்முஃஜமுல் கபீர்-622 , அல்முஃஜமுல் அவ்ஸத்-66 , ஹாகிம்-333 ,

  • காலித் பின் மஃதான் —> அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அஸ்ஸுலமீ —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பார்க்க: அஹ்மத்-17145 , அபூதாவூத்-4607 ,

  • காலித் பின் மஃதான் —> ஹுஜ்ர் பின் ஹுஜ்ர் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பார்க்க: அஹ்மத்-17145 , அபூதாவூத்-4607 , இப்னு ஹிப்பான்-5 , ஹாகிம்-332 ,

  • காலித் பின் மஃதான் —> இப்னு அபூபிலால் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பார்க்க: அஹ்மத்-17146 , 17147 , அல்முஃஜமுல் கபீர்-624-2 ,

  • காலித் பின் மஃதான் —> ஜுபைர் பின் நுஃபைர் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-642 ,

  • காலித் பின் மஃதான் —> தந்தையின் சகோதரர் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-621 ,

  • அர்தாத் பின் முன்திர் —> முஹாஸிர் பின் ஹபீப் —>  இர்பாள் பின் ஸாரியா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-623 ,

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.