தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17170

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (தனது தூதர்) யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு,  ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும்படியும் உத்தரவிட்டான். ஆனால் அவற்றை பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாரிடம் கூறாமல் யஹ்யா (அலை) அவர்கள் காலதாமதம் செய்ய முற்பட்டார்கள். இந்நிலையில் (இறைத்தூதர்) ஈஸா (அலை) அவர்கள், (யஹ்யா (அலை) அவர்களிடம்), “அல்லாஹ் ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும்படியும் உமக்கு உத்தரவிட்டான். (அவற்றைச் செயல்படுத்தும்படி) அவர்களுக்கு நீங்கள் உத்தரவிடவேண்டும். அல்லது நான் உத்தரவிடவேண்டும். (இதை நீங்கள்செய்கிறீர்களா? அல்லது நான் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு யஹ்யா (அலை) அவர்கள், ஈஸா (அலை) அவர்களிடம் “இவ்விசயத்தில் என்னை நீங்கள் முந்திக் கொண்டால் (காலம் தாழ்த்திய குற்றத்துக்காக) நான் பூமியில் புதையுண்டு விடுவோனோ, அல்லது வேறு தண்டனைக்கு நான் உள்ளாவேனோ என நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு யஹ்யா (அலை) அவர்கள் ஜெரூசலத்தில் உள்ள பைத்துல்மக்திஸ் பள்ளிவாசலில் இஸ்ரவேல் மக்களை ஒன்றுகூட்டினார்கள். பள்ளிவாசல் (மக்கள் திரளால்) நிரம்பி, மக்களுக்கு இடம் கிடைக்காமல் அவர்கள் பள்ளிவாசலின் மேல்தளத்தின் மீது ஏறிக்கொண்டனர்.

அப்போது யஹ்யா (அலை) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

ஐந்து கட்டளைகளை நான் நிறைவேற்ற வேண்டுமென்றும், அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி உங்களையும் அவற்றைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட வேண்டும் என்றும் அல்லாஹ் எனக்கு உத்தரவிட்டுள்ளான்.

முதலாவது கட்டளை

அல்லாஹ்வை மட்டுமே நீங்கள் வழிபடுங்கள். அவனுக்கு வேறு யாரையும் இணையாக்காதீர்கள். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவனின் நிலை ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தமக்கே உரிய செல்வத்தில் பொன் அல்லது வெள்ளியைக் கொடுத்து ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார். அவர் (தம் அடிமையிடம்) “இது எனது வீடு; இது எனக்கு நீர் செய்ய வேண்டிய வேலை; நீர் வேலை செய்து (இதில் கிடைக்கும் வருமானத்தை) என்னிடமே கொடுத்து விட வேண்டும்” என்று கூறினார். அவ்வாறே அந்த அடிமையும் வேலை செய்தார். ஆனால் அதில் கிடைத்த (வருமானத்)தை தன் உரிமையாளரிடம் அளிக்காமல் வேறு யரோ ஒருவரிடம் கொடுத்தான். தம்முடைய அடிமை இவ்வாறு இருப்பது கண்டு உங்களில் யார் மகிழ்ச்சி அடைவார்?. (இறைவன் வழங்கியவற்றை அனுபவித்துவிட்டு அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை பிறருக்குச் செய்வது நியாயமா?)

இரண்டாவது கட்டளை

அல்லாஹ் தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். ஆகவே, நீங்கள் தொழும்போது (இங்கும் அங்கும்) திரும்பாதீர்கள். ஏனெனில், அல்லாஹ், தொழுதுக்கொண்டிருக்கும் தன் அடியார் தமது முகத்தை திருப்பாத வரை அவருடைய முகத்துக்கு நேராகத் தனது முகத்தை வைக்கிறான்.

மூன்றாவது கட்டளை

நோன்பு நோற்குமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். நோன்பு நோற்பவரின் நிலையானது, ஒரு கூட்டத்தில் தமது கைப்பை நிரம்ப கஸ்தூரியை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அந்தக் கஸ்தூரியின் மணம் அவர்களில் ஒவ்வொருவரையும் வியப்படையச் செய்கிறது. நோன்பு நோற்றவரின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையை விட நறுமணமிக்கதாகும்.

நான்காவது கட்டளை

தான தர்மம் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். தர்மம் செய்பவரின் நிலையானது, ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவரை எதிரிகள் கைது செய்து அவருடைய கையை கழுத்தோடு சேர்த்துப் பிணைத்து, சிரச்சேதம் செய்வதற்காக அவரைக் கொண்டு சென்றனர். அப்போது அந்தக் கைதி “(என்னிடமுள்ள) குறைவான நிறைவான (எல்லாப்) பொருள்களையும் உங்களிடம் பிணைத் தொகையாகச் செலுத்துகிறேன்” என்று கூறி (அவற்றை செலுத்தி) அவர்களிடமிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.

ஐந்தாவது கட்டளை

அல்லாஹ்வை நினைவுகூர்ந்து துதிக்குமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். அவ்வாறு அல்லாஹ்வை நினைவுகூர்ந்து துதிப்பவரின் நிலையானது, எதிரிகள் மிக வேகமாகப் பின்தொடர்ந்து வருகின்ற ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் பாதுகாப்பான கோட்டை ஒன்றில் புகுந்து அவர்களிடமிருந்து தம்மை தற்காத்துக் கொண்டார். இவ்வாறுதான் ஓர் அடியார் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து துதிக்காமல் ஷைத்தானிடமிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியாது.

(இந்தச் செய்தியை தம் தோழர்களிடம் தெரிவித்த) நபி (ஸல்) அவர்கள், நானும் அல்லாஹ்வின் ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறு உங்களுக்கு உத்தரவிடுகிறேன்.

1 . (தலைவரின் ஆணையைச்) செவியேற்றல்.

2 . (தலைமைக்குக்) கட்டுப்படல்.

3 . அறப்போர் புரிதல்.

4 . (அவசியம் நேர்ந்தால்) புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) செல்லல்.

5 . சமூகக் கட்டமைப்பு(டன் இணைந்திருத்தல்) ஆகியவையாகும்.

ஒருவர் சமூகக் கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவு வெளியேரினாலும் அவர் (மீண்டும் அதனுள்) திரும்பி வரும்வரை இஸ்லாம் எனும் கட்டைத் தமது கழுத்திலிருந்து கழற்றிக் கொண்டுவிட்டார். யார் அறியாமைக் கலாசாரத்திற்கு அழைப்பு விடுக்கிறாரோ அவர் நரக குவியலுக்குச் செல்பவர்களில் உள்ளவர் ஆவார்.

(இவ்வாறு நபி (ஸல் அவர்கள் சொன்னபோது, “அல்லாஹ்வின் தூதரே! அவர் தொழுதாலும் நோன்பு நோற்றாலுமா?” என்று ஒரு மனிதர் கேட்டார். “(ஆம்) அவர் தொழுதாலும் நோன்பு நோற்றாலும் சரியே!(நரகத்துக்குத் தான் செல்வார்). ஆயினும் (இவர்கள் முஸ்லிம்கள்தாம். இவர்களை) அல்லாஹ் உங்களைப் பெயர் சூட்டி அழைப்பதைப் போன்றே முஸ்லிம்கள் (இறைவனுக்கு கீழ்படிபவர்கள்); முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்); இபாதுல்லாஹ் (அல்லாஹ்வின் அடியார்கள்) என்றே அழையுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸ் பின் ஹாரிஸ் அல்அஷ்அரீ (ரலி)

(முஸ்னது அஹமது: 17170)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبُو خَلَفٍ مُوسَى بْنُ خَلَفٍ، كَانَ يُعَدُّ فِي الْبُدَلَاءِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ مَمْطُورٍ، عَنِ الْحَارِثِ الْأَشْعَرِيِّ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَمَرَ يَحْيَى بْنَ زَكَرِيَّا عَلَيْهِمَا السَّلَامُ بِخَمْسِ كَلِمَاتٍ، أَنْ يَعْمَلَ بِهِنَّ، وَأَنْ يَأْمُرَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يَعْمَلُوا بِهِنَّ، وَكَادَ أَنْ يُبْطِئَ، فَقَالَ لَهُ عِيسَى: إِنَّكَ قَدْ أُمِرْتَ بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ تَعْمَلَ بِهِنَّ، وَتَأْمُرَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يَعْمَلُوا بِهِنَّ، فَإِمَّا أَنْ تُبَلِّغَهُنَّ، وَإِمَّا أَنْ أُبَلِّغَهُنَّ. فَقَالَ: يَا أَخِي، إِنِّي أَخْشَى إِنْ سَبَقْتَنِي أَنْ أُعَذَّبَ أَوْ يُخْسَفَ بِي “. قَالَ: ” فَجَمَعَ يَحْيَى بَنِي إِسْرَائِيلَ فِي بَيْتِ الْمَقْدِسِ، حَتَّى امْتَلَأَ الْمَسْجِدُ، فَقُعِدَ عَلَى الشُّرَفِ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَمَرَنِي بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ أَعْمَلَ بِهِنَّ، وَآمُرَكُمْ أَنْ تَعْمَلُوا بِهِنَّ. أَوَّلُهُنَّ: أَنْ تَعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا، فَإِنَّ مَثَلَ ذَلِكَ مَثَلُ رَجُلٍ اشْتَرَى عَبْدًا مِنْ خَالِصِ مَالِهِ بِوَرِقٍ أَوْ ذَهَبٍ، فَجَعَلَ يَعْمَلُ، وَيُؤَدِّي غَلَّتَهُ إِلَى غَيْرِ سَيِّدِهِ، فَأَيُّكُمْ سَرَّهُ أَنْ يَكُونَ عَبْدُهُ كَذَلِكَ، وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَكُمْ وَرَزَقَكُمْ، فَاعْبُدُوهُ، وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا. وَآمُرُكُمْ بِالصَّلَاةِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْصِبُ وَجْهَهُ لِوَجْهِ عَبْدِهِ مَا لَمْ يَلْتَفِتْ، فَإِذَا صَلَّيْتُمْ فَلَا تَلْتَفِتُوا. وَآمُرُكُمْ بِالصِّيَامِ، فَإِنَّ مَثَلَ ذَلِكَ كَمَثَلِ رَجُلٍ مَعَهُ صُرَّةٌ مِنْ مِسْكٍ فِي عِصَابَةٍ كُلُّهُمْ يَجِدُ رِيحَ الْمِسْكِ، وَإِنَّ خُلُوفَ فَمِ الصَّائِمِ عِنْدَ اللَّهِ أَطْيَبُ مِنْ رِيحِ الْمِسْكِ. وَآمُرُكُمْ بِالصَّدَقَةِ، فَإِنَّ مَثَلَ ذَلِكَ كَمَثَلِ رَجُلٍ أَسَرَهُ الْعَدُوُّ، فَشَدُّوا يَدَيْهِ إِلَى عُنُقِهِ، وَقَدَّمُوهُ لِيَضْرِبُوا عُنُقَهُ، فَقَالَ: هَلْ لَكُمْ أَنْ أَفْتَدِيَ نَفْسِي مِنْكُمْ؟ فَجَعَلَ يَفْتَدِي نَفْسَهُ مِنْهُمْ بِالْقَلِيلِ وَالْكَثِيرِ حَتَّى فَكَّ نَفْسَهُ. وَآمُرُكُمْ بِذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ كَثِيرًا، وَإِنَّ مَثَلَ ذَلِكَ كَمَثَلِ رَجُلٍ طَلَبَهُ الْعَدُوُّ سِرَاعًا فِي أَثَرِهِ، فَأَتَى حِصْنًا حَصِينًا، فَتَحَصَّنَ فِيهِ، وَإِنَّ الْعَبْدَ أَحْصَنُ مَا يَكُونُ مِنَ الشَّيْطَانِ إِذَا كَانَ فِي ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ ” قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَأَنَا آمُرُكُمْ بِخَمْسٍ اللَّهُ أَمَرَنِي بِهِنَّ: بِالْجَمَاعَةِ، وَالسَّمْعِ، وَالطَّاعَةِ، وَالْهِجْرَةِ، وَالْجِهَادِ فِي سَبِيلِ اللَّهِ، فَإِنَّهُ مَنْ خَرَجَ مِنَ الْجَمَاعَةِ قِيدَ شِبْرٍ فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ عُنُقِهِ إِلَّا أَنْ يَرْجِعَ، وَمَنْ دَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ، فَهُوَ مِنْ جُثَاءِ جَهَنَّمَ ” قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَإِنْ صَامَ، وَإِنْ صَلَّى؟ قَالَ: «وَإِنْ صَامَ، وَإِنْ صَلَّى، وَزَعَمَ أَنَّهُ مُسْلِمٌ، فَادْعُوا الْمُسْلِمِينَ بِأَسْمَائِهِمْ بِمَا سَمَّاهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ الْمُسْلِمِينَ الْمُؤْمِنِينَ عِبَادَ اللَّهِ عَزَّ وَجَلَّ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17170.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16839.




1 . இந்தக் கருத்தில் ஹாரிஸ் பின் ஹாரிஸ் அல்அஷ்அரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மம்தூர்-அபூஸல்லாம் —> ஹாரிஸ் பின் ஹாரிஸ் அல்அஷ்அரீ (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-1717017800 , 22910 , திர்மிதீ-28632864 , குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,

…அஹ்மத்-, அல்முஃஜமுல் கபீர்-,

…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-,

…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-,

…அல்முஃஜமுல் கபீர்-,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.