தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-18647

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யும் ஒரு அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டார். அதற்கவர்கள், நீர் மிகச் சிறிய வார்த்தையைக் கூறினாலும் நிச்சயமாக மிகப் பெரிய செய்தியைக் கேட்டுவிட்டீர்!

ஜீவன்களை உரிமை விடு! அடிமையை உரிமை விடு! என்றார்கள். அதற்கவர், இவ்விரண்டும் ஒன்றில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை, ஜீவன்களை உரிமை விடுவதென்பது நீ தனிப்பட்ட ரீதியில் அடிமையை உரிமை விடுவதாகும். ஃபக்குர் ரகபா என்பது அடிமை விடுதலை பெற அதற்குரிய கிரயத்தை நீ கொடுப்பதாகும்.

மேலும்

பால் கொடுக்கும் கால்நடைகளை பிறருக்குக் கொடு!

பிரிந்து வாழும் உறவினர்களுடன் இணைந்து வாழவேண்டும்.

இதனைச் செய்ய உமக்கு சக்தியில்லை என்றால் பசித்தவருக்கு உணவளி! தாகித்தவருக்கு தண்ணீர் புகட்டு!

நன்மையை ஏவு! தீமையைத் தடு! இதற்கும் நீர் சக்தி பெறவில்லை என்றால்

நன்மையைத் தவிர வேறு எதனையும் பேசாதவாறு உனது நாவை காத்துக் கொள்! என்றார்கள்.

அறிவிப்பவர்: அல்பராஉ பின் ஆஸிப் (ரலி­)

(முஸ்னது அஹமது: 18647)

حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، وَأَبُو أَحْمَدَ، قَالَا: حَدَّثَنَا عِيسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْبَجَلِيُّ، مِنْ بَنِي بَجِيلَةَ مِنْ بَنِي سُلَيْمٍ، عَنْ طَلْحَةَ، قَالَ: أَبُو أَحْمَدَ حَدَّثَنَا طَلْحَةُ بْنُ مُصَرِّفٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ:

جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ، فَقَالَ: «لَئِنْ كُنْتَ أَقْصَرْتَ الْخُطْبَةَ، لَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ، أَعْتِقِ النَّسَمَةَ، وَفُكَّ الرَّقَبَةَ» . فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَوَلَيْسَتَا بِوَاحِدَةٍ؟ قَالَ: «لَا، إِنَّ عِتْقَ النَّسَمَةِ أَنْ تَفَرَّدَ بِعِتْقِهَا، وَفَكَّ الرَّقَبَةِ أَنْ تُعِينَ فِي عِتْقِهَا، وَالْمِنْحَةُ الْوَكُوفُ، وَالْفَيْءُ عَلَى ذِي الرَّحِمِ الظَّالِمِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَأَطْعِمِ الْجَائِعَ، وَاسْقِ الظَّمْآنَ، وَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَانْهَ عَنِ الْمُنْكَرِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنَ الْخَيْرِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-17902.
Musnad-Ahmad-Shamila-18647.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18269.




இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி­) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-775 , அஹ்மத்-18647 , அல்அதபுல் முஃப்ரத்-69 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2743 , 2744 , இப்னு ஹிப்பான்-374 , தாரகுத்னீ-2055 , 2056 , 2057 , ஹாகிம்-2861 , குப்ரா பைஹகீ-21313 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.