தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21310

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யார் தனது உள்ளத்தை ஈமானுக்காகத் தூய்மையாக்கி, மேலும் தன் உள்ளத்தை தவறுகளிலிருந்து பாதுகாப்பாக்கி (ஈமானில்) மன நிறைவு பெற்றதாக்கி தனது நாவை உண்மை பேசக் கூடியதாகவும் தனது சரீரத்தை சீரானதாகவும் தனது செவிப்புலனை (நல்லவற்றை) கேட்கக் கூடியதாகவும் தனது கண்ணை (நல்லவற்றை) காணக் கூடியதாகவும் ஆக்கி விட்டாரோ அவர் வெற்றி பெற்று விட்டார். யார் தனது உள்ளத்தை (நல்லவற்றை) ஏற்றுக் கொள்ளக் கூடியதாக ஆக்கி விட்டாரோ அவர் வெற்றி பெற்று விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

(முஸ்னது அஹமது: 21310)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْعَبَّاسِ، حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: وَأَخْبَرَنِي بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، قَالَ: قَالَ أَبُو ذَرٍّ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«قَدْ أَفْلَحَ مَنْ أَخْلَصَ قَلْبَهُ لِلْإِيمَانِ، وَجَعَلَ قَلْبَهُ سَلِيمًا، وَلِسَانَهُ صَادِقًا، وَنَفْسَهُ مُطْمَئِنَّةً، وَخَلِيقَتَهُ مُسْتَقِيمَةً، وَجَعَلَ أُذُنَهُ مُسْتَمِعَةً، وَعَيْنَهُ نَاظِرَةً، فَأَمَّا الْأُذُنُ فَقَمِعٌ، وَالْعَيْنُ مُقِرَّةٌ بِمَا يُوعَى الْقَلْبُ، وَقَدْ أَفْلَحَ مَنْ جَعَلَ قَلْبَهُ وَاعِيًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-20348.
Musnad-Ahmad-Shamila-21310.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-20793.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين خالد بن معدان الكلاعي وأبو ذر الغفاري ، وباقي رجاله ثقات عدا بقية بن الوليد الكلاعي وهو صدوق كثير التدليس عن الضعفاء

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14660-காலித் பின் மஃதான் அவர்களுக்கும், அபூதர் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார். ராவீ-9319-பக்கிய்யது பின் வலீத் பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/174)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.