தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22642

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

“திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு “தனது ருகூவையும், ஸுஜூதையும் முழுமையாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” (என்றோ) அல்லது ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவனே அந்தத் திருடன்” (என்றோ) நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

 

(முஸ்னது அஹமது: 22642)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّوْشَجَانِ وَهُوَ أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَسْوَأُ النَّاسِ سَرِقَةً الَّذِي يَسْرِقُ مِنْ صَلَاتِهِ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَسْرِقُ مِنْ صَلَاتِهِ؟ قَالَ: «لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا»

أَوْ قَالَ: «لَا يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21591.
Musnad-Ahmad-Shamila-22642.
Musnad-Ahmad-Alamiah-21591.
Musnad-Ahmad-JawamiulKalim-22040.




இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள் விவரம்:

1 . முஹம்மது பின் நூஷஜான்

2 . வலீத் பின் முஸ்லிம்

3 . அப்துர்ரஹ்மான் பின் அம்ர் (இமாம் அவ்ஸாயீ)

4 . யஹ்யா பின் அபூகஸீர்

5 . அப்துல்லாஹ் பின் அபூகதாதா (ரஹ்)

6 . அபூகதாதா (ரலி)

  • இந்தச் செய்தி இமாம் அவ்ஸாயீ அவர்கள் வழியாக இருவகையான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

1 . இமாம் அவ்ஸாயீ அவர்களிடமிருந்து வலீத் பின் முஸ்லிம் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடர். (மேற்கண்ட செய்தி)

2 . மற்றொன்று இமாம் அவ்ஸாயீ அவர்களிடமிருந்து அப்துல்ஹமீத் பின் ஹபீப் பின் அபுல்இஷ்ரீன் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடர்.

(பார்க்க: இப்னு ஹிப்பான்-1888)

இந்த இரண்டு அறிவிப்பாளர்தொடர்களையும் முன்கர்-நிராகரிக்கப்பட்டது என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார். வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள் தொழுகை சம்பந்தமான ஹதீஸ்களை தனியாக தொகுத்திருந்தார். அதில் இந்த ஹதீஸ் இல்லை என்பது தான் இதற்கான காரணமாக அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-487)

முதல் அறிவிப்பாளர்தொடர்

  • இந்தச் செய்தியை இமாம் அவ்ஸாயீ அவர்களிடமிருந்து வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார் என்று இமாம் பகவீ, தப்ரானீ ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவ்வாறே இந்தச் செய்தியை வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அவர்களிடமிருந்து  ஹகம் பின் மூஸா மட்டுமே தனித்து அறிவித்துள்ளார் என்று இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    தாரிமீ, தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அவர்களிடமிருந்து  ஹகம் பின் மூஸா, ஸுலைமான் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அல்வாஸிதீ ஆகியோர் மட்டுமே அறிவித்துள்ளனர் என்று தப்ரானீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகு பக்தாத்-, அல்இலலுல் வாரிதா-6/141, …)

என்றாலும் இந்த செய்தியை வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்களிடமிருந்து மூவர் அறிவித்துள்ளனர்.

1 . ஹகம் பின் மூஸா (அபூஸாலிஹ் அல்பக்தாதீ).

2 . முஹம்மது பின் நூஷஜான் (அபூஜஃபர் அஸ்ஸுவைதீ).

3 . ஸுலைமான் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அல்வாஸிதீ.

  • இதில் ஸுலைமான் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அல்வாஸிதீ
    பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சிக்கப்பட்டவர் என்பதால் வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அவர்களிடமிருந்து இருவர் அறிவித்துள்ளனர் என்று முடிவுசெய்யலாம். இதன்படியே அபூஸுர்ஆ, கதீப் பக்தாதீ, இப்னு அஸாகிர் ஆகியோர் இந்த செய்தியை ஹகம் பின் மூஸா மட்டும் தனித்து அறிவிக்கவில்லை. முஹம்மது பின் நூஷஜான் என்பவரும் அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளனர்.
  • முஹம்மது பின் நூஷஜான் என்பவர் பற்றி தனக்கு தெரியாது என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார். (இதன் அடிப்படையில் தான் சிலர் இவரை பலவீனமானவர் என்று கூறுகின்றனர்)

(என்றாலும் இவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் பலமானவர்களின் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார் என்பதுடன் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களும் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார். இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரைப் பற்றி ஹதீஸில் சந்தேகம் எழுப்பக்கூடியவராக இருந்தார் என்றும், அப்துர்ரஸ்ஸாகிடமிருந்து மற்றவர்கள் 30 ஆயிரம் ஹதீஸ்களை கேட்டு சென்றனர். இவர் 4 ஆயிரம் ஹதீஸ்களை மட்டுமே கேட்டுச் சென்றார் என்று கூறியுள்ளார். (இது இவரைப் பற்றிய பாராட்டு ஆகும். விமர்சனம் அல்ல. அப்துல்கரீம் ஸம்ஆனீ அவர்கள், இவர் தனது ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸை கேட்பதில் பேணுதல் உள்ளவர் என்று கூறியுள்ளார். நூல்: அல்அன்ஸாப்-7/304)

  • ஹகம் பின் மூஸா, ஷாமைச் சேர்ந்தவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளார். ஆனால் இவர் வலீத் பின் முஸ்லிமின் மாணவர்களில் முக்கியமான ஒருவரல்ல. இதனால் தான் இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் இந்த செய்தியை முன்கர் என்று கூறியுள்ளனர்.

(முஹம்மது பின் நூஷஜான் பற்றிய விமர்சனம் சரியில்லை என்றாலும் வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
என்பவர், அவ்ஸாயீ வழியாக வரும் செய்திகளிலும், மற்றவர்கள் வழியாக வரும் செய்திகளிலும் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் என்று சிலரால் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதாலும் சிலர் இந்த அறிவிப்பாளர்தொடரை பலவீனம் என்று கூறுகின்றனர். வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவ்ஸாயீ வழியாக அறிவிக்கும் சில செய்திகளை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் பதிவு செய்துள்ளார். அவ்ஸாயீ அவர்களின் மற்ற மாணவர்களும் அவ்வாறு அறிவித்திருப்பதால் தான் வலீத் பின் முஸ்லிமின் அறிவிப்பாளர்தொடரை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் பதிவு செய்துள்ளார்.)

(ஆய்வுக்காக: வலீத் பின் முஸ்லிம்)

இரண்டாவது அறிவிப்பாளர்தொடர்.

  • இமாம் அவ்ஸாயீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-21137-அப்துல் ஹமீத் பின் ஹபீப் பின் அபுல்இஷ்ரீன் என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    ஹிஷாம் பின் அம்மார், அபூஸுர்ஆ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    அவர்கள், இவர் ஹதீஸையுடையவர் அல்ல என்றும், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளார்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் சில நேரம் தான் அறிவிக்கும் செய்தியை மாறுபட்டு அறிவிப்பவர் என்றும், இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்றும் கூறியுள்ளார். இவ்வாறே நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    ஆகியோரும் கூறியுள்ளனர். மேலும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவர் அவ்ஸாயீ அவர்களிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் இவர் எழுத்தராக இருந்தார். ஹதீஸையுடையவர் அல்ல என்றும், இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்றும் கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், (புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியதைப் போன்றே) இவர் அவ்ஸாயீ அவர்களிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் சில நேரம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/11, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/11, தஹ்தீபுத் தஹ்தீப்-2/474, தக்ரீபுத் தஹ்தீப்-1/564)

அவ்ஸாயீ இமாம் அவர்களின் மாணவர்கள் அதிகமானவர்கள் என்றிருந்தும் வலீத் பின் முஸ்லிமும், அப்துல்ஹமீத் பின் ஹபீப் பின் அபுல்இஷ்ரீனும் மட்டுமே இந்த செய்தியை அறிவிப்பதாலும், இத்துடன் இருவரும் வெவ்வேறு அறிவிப்பாளர்தொடரை அறிவித்துள்ளனர் என்பதாலும், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களின் விமர்சனமே சரியானது என்பதின்படியும் சில ஆய்வாளர்கள் இந்த அறிவிப்பாளர்தொடர்களை பலவீனமானவை என்று கூறியுள்ளனர். என்றாலும் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்தியையும், நுஃமான் பின் முர்ரா (ரஹ்), ஹஸன் பஸரீ (ரஹ்) ஆகியோர் வழியாக முர்ஸலாக வரும் செய்திகளையும் இணைத்து (ஷாஹித் மூலம்) ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.

(நூல்: ஃபள்லுர் ரஹீமுல் வதூத்-9/393)

(இதனடிப்படையில் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களிலும் விமர்சனம் இருப்பதால் (ஷாஹித், முதாபஅத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாதவர்களின் பார்வையில்) ருகூஉ, ஸஜ்தாவை முழுமையாக நிறைவேற்றாதவர் மிகவும் மோசமான திருடன் என்ற கருத்து பலவீனமானதாகும்.)

இந்தக் கருத்துடன் தொடர்புடைய சரியான செய்தி:

பார்க்க: நஸாயீ-1027 , …

1 . இந்தக் கருத்தில் அபூகதாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் நூஷஜான், ஹகம் பின் மூஸா —> வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —> இமாம் அவ்ஸாயீ —> யஹ்யா பின் அபூகஸீர் —> அப்துல்லாஹ் பின் அபூகதாதா —> அபூகதாதா (ரலி)

பார்க்க: அஹ்மத்-22642 , 22643 , தாரிமீ-1367 , இப்னு குஸைமா-663 , அல்முஃஜமுல் கபீர்-3283 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8179 , ஹாகிம்-835 , குப்ரா பைஹகீ-3996 ,

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-1888 .

3 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11532 .

4 . அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-3392 .

5 . நுஃமான் பின் முர்ரா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-462 .

6 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2967 .

…இன்ஷா அல்லாஹ் மற்ற தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: நஸாயீ-1027 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.