தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23630

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

“நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே, சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள்.

“நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா? என்று பாருங்கள்” என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)

(முஸ்னது அஹமது: 23630)

حَدَّثَنَا يُونُسُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَزِيدَ يَعْنِي ابْنَ الْهَادِ، عَنْ عَمْرٍو، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ» قَالُوا: وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: ” الرِّيَاءُ، يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ: إِذَا جُزِيَ النَّاسُ بِأَعْمَالِهِمْ: اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-22528.
Musnad-Ahmad-Shamila-23630.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23006.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32563-அம்ர் பின் அபூஅம்ர் அவர்களுக்கும் மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஆஸிம் பின் உமர் விடப்பட்டுள்ளார். அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் தனது தந்தை அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹம்பல் அவர்கள் கைப்பட எழுதிய நூலில் இருவருக்கும் இடையில் ஆஸிம் பின் உமர் கூறப்பட்டுள்ளார் என்று (வேறு ஒரு அறிவிப்பாளர்தொடரில்) தெளிவுப்படுத்தியுள்ளார். (என்றாலும் அந்த அறிவிப்பாளர்தொடரில் வேறு விமர்சனம் உள்ளது என்பதால் அது பலவீனமானதாகும்).

(பார்க்க: அஹ்மத்-23636).

  • வேறு சில சரியான ஹதீஸ்களின் அடிப்படையில் பார்க்கும் போது அம்ர் பின் அபூஅம்ருக்கும், மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஆஸிம் பின் உமர் கூறப்படுகிறார் என்பதால் இவர், மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை செவியேற்கவில்லை என்று தெரிகிறது. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3481 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.