தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-2387

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்து யஸீத் மகனான ருகானா தனது மனைவியை ஒரே அமர்வில் முத்தலாக் விட்டு விட்டார். பின்னர் அதற்காகப் பெரிதும் கவலைப் பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ அவளை எப்படி தலாக் விட்டாய்?” என்று கேட்டார்கள். நான் அவளை முத்தலாக் விட்டேன் என்று அவர் பதில் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரே அமர்விலா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். “அது ஒரு தலாக் தான். நீ விரும்பினால் அவளை மீட்டிக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் அவளை மீட்டிக் கொண்டார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(முஸ்னது அஹமது: 2387)

حَدَّثَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي دَاوُدُ بْنُ الْحُصَيْنِ، عَنْ عِكْرِمَةَ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

طَلَّقَ رُكَانَةُ بْنُ عَبْدِ يَزِيدَ أَخُو بَنِي الْمُطَّلِبِ امْرَأَتَهُ ثَلَاثًا فِي مَجْلِسٍ وَاحِدٍ، فَحَزِنَ عَلَيْهَا حُزْنًا شَدِيدًا، قَالَ: فَسَأَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ طَلَّقْتَهَا؟» قَالَ: طَلَّقْتُهَا ثَلَاثًا، قَالَ: فَقَالَ: «فِي مَجْلِسٍ وَاحِدٍ؟» قَالَ: نَعَمْ قَالَ: «فَإِنَّمَا تِلْكَ وَاحِدَةٌ فَأَرْجِعْهَا إِنْ شِئْتَ» قَالَ: فَرَجَعَهَا فَكَانَ ابْنُ عَبَّاسٍ: «يَرَى أَنَّمَا الطَّلَاقُ عِنْدَ كُلِّ طُهْرٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-2266.
Musnad-Ahmad-Shamila-2387.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15208-தாவூத் பின் ஹுஸைன் பலமானவர் என்றாலும் இவர் இக்ரிமா வழியாக அறிவிப்பது முன்கரானவை என இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    போன்றோர் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுல் கமால்-1753, தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1/561)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூன்று தலாக் விடப்பட்டதாக வரும் இந்த சம்பவம் பற்றி வரும் செய்திகள் குளறுபடியானவை என இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
போன்றோர் விமர்சித்துள்ளனர். மேலும் இது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு தலாக்கே இருந்தது என்று வந்துள்ள ஹதீஸ்களுக்கு மாற்றமானது என்றும் கூறுகின்றனர்…

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-2387 , முஸ்னத் அபீ யஃலா-2500 , குப்ரா பைஹகீ-14986 , 14987 ,

2 . ருகானா பின் அப்து யஸீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1177 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.