தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-24009-38

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

24009-அம்ர் அல்லது உமாரா அவர்கள் கூறுகிறார்கள்:

நான் கப்ரின் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அப்போது கப்ரை விட்டு இறங்குவீராக! கப்ரில் உள்ளவருக்கு நோவினை செய்யாதீர் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

(முஸ்னது அஹமது: 38)

حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا بَكْرُ بْنُ سَوَادَةَ، عَن زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ، عَنْ عُمَارَةَ بْنِ حَزْمٍ، قَالَ

رَآنِي رَسُولًُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عَلَى قَبْرٍ. وَقَالَ فِي مَوْضِعٍ آخَرَ زِيَادُ بْنُ نُعَيْمٍ، أَنَّ ابْنَ حَزْمٍ – إِمَّا عَمْرٌو، وَإِمَّا عُمَارَةُ – قَالَ: رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُتَّكِئٌ عَلَى قَبْرٍ، فَقَالَ: «انْزِلْ مِنَ الْقَبْرِ لَا تُؤْذِي صَاحِبَ الْقَبْرِ، وَلَا يُؤْذِيكَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-20934.
Musnad-Ahmad-Shamila-24009.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23410.




அம்ர் பின் ஹஸ்ம் (ரலி), அல்லது உமாரா பின் ஹஸ்ம் (ரலி)

  • இந்தச் செய்தியில் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அல்லது உமாரா பின் ஹஸ்ம் (ரலி) என்று சந்தேகமாக அறிவித்திருப்பவர் இப்னு லஹீஆ ஆவார். வேறு அறிவிப்பாளர்தொடரில் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) என்று இடம்பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டவர் என்பதாலும் இந்த செய்தியை இவர் தனித்து அறிவிப்பதாலும், இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: நஸாயீ-2045 .


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.