தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-24254

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒட்டகப் போருக்காக ஆயிஷா (ரலி) அவர்கள் புறப்பட்ட போது) வழியில் இரவு நேரத்தில் பனூஆமிர் கூட்டத்தாரின் நீர் பகுதிக்கு அருகில் தங்கினார்கள். அந்த இடத்தில் நாய்கள் குரைத்தன. இதைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் ‘இந்த நீர் பகுதியின் பெயரென்ன? என்று கேட்டார்கள். உடனிருந்தவர்கள் ஹவ்அப்’ என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் நான் திரும்பிச் செல்வதே நல்லது என எண்ணுகிறேன் எனக் கூறினார்கள். அப்போது அவர்களுடன் இருந்தவர்களில் சிலர் நீங்கள் வருவதால் உங்களை முஸ்லிம்கள் பார்ப்பார்கள். அதனால் அவர்களுக்கு மத்தியில் (சண்டை ஏற்படாமல்) ஒரு இணக்கத்தை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்று கூறினர். 

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், (என் மனைவியராகிய) உங்களில் ஒருவருக்கு எதிராக ஹவ்அப்’ என்ற இடத்தில் நாய்கள் குரைக்கும். அப்போது அவரது நிலை எப்படி இருக்குமோ? என்று நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் கூறினார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

(முஸ்னது அஹமது: 24254)

حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ قَالَ:

لَمَّا أَقْبَلَتْ عَائِشَةُ بَلَغَتْ مِيَاهَ بَنِي عَامِرٍ لَيْلًا نَبَحَتِ الْكِلَابُ، قَالَتْ: أَيُّ مَاءٍ هَذَا؟ قَالُوا: مَاءُ الْحَوْأَبِ قَالَتْ: مَا أَظُنُّنِي إِلَّا أَنِّي رَاجِعَةٌ فَقَالَ بَعْضُ مَنْ كَانَ مَعَهَا: بَلْ تَقْدَمِينَ فَيَرَاكِ الْمُسْلِمُونَ، فَيُصْلِحُ اللَّهُ عَزَّ وَجَلَّ ذَاتَ بَيْنِهِمْ، قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَنَا ذَاتَ يَوْمٍ: «كَيْفَ بِإِحْدَاكُنَّ تَنْبَحُ عَلَيْهَا كِلَابُ الْحَوْأَبِ؟»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-24758.
Musnad-Ahmad-Shamila-24254.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23699.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34419-கைஸ் பின் அபூஹாஸிம் அவர்கள் அபூஹாஸிம் (ரலி) அவர்களின் மகனும், முக்கியமான தாபிஈன்களில் ஒருவரும் ஆவார். மேலும் இவர் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பாளராக உள்ளார். யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    இவர் முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். (இதற்கு இரண்டு பொருள் உள்ளது). இதன் கருத்து தனித்து அறிவிப்பவர் என்பதாகும் என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    கூறியுள்ளார்.( பலமானவர்களுக்கு மாற்றமாக பலவீனமானவர் அறிவிக்கும் செய்தி என்ற கருத்தல்ல). மற்ற பல அறிஞர்கள் இவரை பாராட்டியுள்ளனர். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவரைப் பற்றிய விமர்சனம் சரியானதல்ல என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால் 24/10, தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/444, அல்காஷிஃப் 4/ 49, அல்கவாகிபுன் நய்யிராத் 1/374…)

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37771 , அஹ்மத்-24254 , 24654 , முஸ்னத் அபீ யஃலா-4868 , இப்னு ஹிப்பான்-6732 , ஹாகிம்-4613 ,

2 . தாவூத் பின் கைஸான் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21677 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.