தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-27198

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை பார்த்து உனக்கும் என்னுடைய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே ஒரு பெரிய விவகாரம் நடைபெறும் என்றார்கள். அதை கேட்ட அலீ (ரலி) அவர்கள், எனக்கும் ஆயிஷாவுக்குமா சண்டை நடக்க போகிறது? அப்படியானால், என்னைவிட துர்பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை. அப்படி நடந்தால் ஆயிஷாவை பாதுகாப்பான இடத்திற்கு நீர் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூராஃபிஉ (ரஹ்)

(முஸ்னது அஹமது: 27198)

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ يَعْنِي ابْنَ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَحْيَى، عَنْ أَبِي أَسْمَاءَ مَوْلَى بَنِي جَعْفَرٍ، عَنْ أَبِي رَافِعٍ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ: «إِنَّهُ سَيَكُونُ بَيْنَكَ وَبَيْنَ عَائِشَةَ أَمْرٌ» ، قَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَعَمْ» ، قَالَ: أَنَا؟ قَالَ: «نَعَمْ» ، قَالَ: فَأَنَا أَشْقَاهُمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لَا، وَلَكِنْ إِذَا كَانَ ذَلِكَ فَارْدُدْهَا إِلَى مَأْمَنِهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-25943.
Musnad-Ahmad-Shamila-27198.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26561.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33795-ஃபுளைல் பின் ஸுலைமான் அன்னுமைரீ புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பாளர் ஆவார். இவரைப் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் ஒரு பொருட்டே அல்ல. இவரின் ஹதீஸ்களை எழுதக்கூடாது என்று கூறியதாக ஸாஜீ கூறுகிறார். என்றாலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களின் மாணவர்களில் ஒருவரான அப்பாஸ் தூரீ பிறப்பு ஹிஜ்ரி 185
    இறப்பு ஹிஜ்ரி 271
    வயது: 86
    அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியதாக அறிவித்துள்ளார். ஸாஜீ அவர்களே இவர் நம்பகமானவர். என்றாலும் சில செய்திகளை (முன்கராக அதாவது) தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

அபூஸுர்ஆ அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் சிறிது பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் (அறிவிப்பாளர்களை எடை போடுவதில் கடும்போக்கு கொண்டரவாக இருந்தும், சிறு குறை இருந்தாலும் அவரிடமிருந்து ஹதீஸை அறிவிப்பதில்லை என்ற முடிவு கொண்டவராக இருந்தும்) இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என அபூஸுர்ஆ கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/398),

  • மேற்கண்ட ஆரம்பகால ஹதீஸ்கலை அறிஞர்களில் இருவிதமான கருத்துக்கள் இருந்ததைப் போன்றே அவர்களின் மாணவர்களிலும் இந்த கருத்து உள்ளது. புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்றோர் இவர் இடம்பெறும் சில செய்திகளை பதிவு செய்துள்ளனர்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், ஆதாரம் இல்லாமல் விமர்சிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இவரைக் கூறியுள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான்-2210)
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-5462 -1/785)

மேற்கண்ட அறிஞர்களின் விமர்சனத்தின் படி இவரின் நம்பகத்தன்மையில் விமர்சனம் இல்லை. நினைவாற்றலில் தான் விமர்சனம் உள்ளது. எனவே இவர் தனித்து அறிவித்தால் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், இவரைப் போன்று மற்றவர்கள் அறிவித்தால் தான் துணைசான்றாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் கூறியுள்ளனர். இந்த செய்தியை இவர் தனித்து அறிவிப்பதால் இது பலவீனமானது என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
கூறியுள்ளார்.

(நூல்: அள்ளயீஃபா-5726, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-5427)

புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
போன்றோர் சில விமர்சிக்கப்பட்டவர்களின் வழியாகவும் அவர்களின் செய்திகளை ஆய்வு செய்த பின் அறிவித்துள்ளனர் என  அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-27198 , முஸ்னத் பஸ்ஸார்-3881 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-5612 , 5613 , அல்முஃஜமுல் கபீர்-995 ,

2 comments on Musnad-Ahmad-27198

  1. இவர் பலமானவர் அல்ல என்றும் அவரது செய்திகள் எழுத கூடாது என்று இமாம் யஹ்யா இப்னு மயீன் (ரஹ்) கூறுகிறார்கள்

    இவர் பலமானவர் அல்ல என்று இமாம் நஸாயி(ரஹ்) கூறுகிறார்கள்

    இவர் பலமானவர் அல்ல ஆனால் இவரது செய்திகளை எழுதி கொள்ளலாம் என்று அபு ஹாத்தீம் அர்ராஸி(ரஹ்) கூறுகிறார்கள்

    இவர் சதூக் என்று ஆனால் நிறைய தவறுகள் செய்ய கூடியவர் என்று இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள்

    இவர் பலவீனமானவர் என்று பக்தாதி (ரஹ்) கூறுகிறார்கள்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.