தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-8718

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் உங்களிடத்தில் மூன்று விசயங்களை விரும்புகிறான். மூன்று விசயங்களை வெறுக்கிறான்.

1 . நீங்கள் அவனுக்கு இணைவைக்காமல் வணங்குவதையும்;

2 . உங்களின் காரியத்திற்கு யாரை அவன் பொருப்பாளனாக நியமித்துள்ளானோ அவருக்கு நீங்கள் நலம் நாடுவதையும்;

3 . பிரிந்துவிடாமல் அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் பற்றிப் பிடிப்பதையும் அல்லாஹ் உங்களிடத்தில் விரும்புகிறான்.

1 . (ஆதாரமில்லாமல்) இவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என்று கூறுவதையும்;

2 . (தேவையில்லாமல்) அதிகமாகக் கேள்வி கேட்பதையும்;

3 . பொருளை விரையமாக்குவதையும் அல்லாஹ் உங்களிடத்தில் வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹமது: 8718)

حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ رَضِيَ لَكُمْ ثَلَاثًا، وَكَرِهَ لَكُمْ ثَلَاثًا: رَضِيَ لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَأَنْ تَنْصَحُوا لِمَنْ وَلَّاهُ اللَّهُ أَمْرَكُمْ، وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا، وَلَا تَفَرَّقُوا، وَكَرِهَ لَكُمْ: قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ الْمَالِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-8361.
Musnad-Ahmad-Shamila-8718.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8516.




  • இதன் அறிவிப்பாளர்தொடர்களைப் பற்றி விரிவாக கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இந்தச் செய்தியை அதிகமானோர் ஸுஹைல் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) —> நபி (ஸல்) 

என்ற அறிவிப்பாளர்தொடரில் அபூஸாலிஹ் அவர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களை கூறி முத்தஸிலாக அதாவது அறிவிப்பாளர்தொடர் முறிவடையாமல் அறிவித்துள்ளனர். இதுவே சரியானதாகும் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-10/290)

இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுஹைல் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) —> நபி (ஸல்) 

பார்க்க: அஹ்மத்-8718 , .., முஸ்லிம்-3533 ,…

  • ஸுஹைல் —> அபூஸாலிஹ் (ரஹ்) —> நபி (ஸல்) 

பார்க்க: மாலிக்-2833 ,

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.