தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2707

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

என் தந்தை ஸஹ்ல் பின் ஹுனைப் (ரலி) அவர்கள் கர்ரார் எனும் இடத்தில் குளித்தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடையை கழற்றிய போது ஆமிர் பின் ரபீஆ பார்த்துக் கொண்டிருந்தார். ஸஹ்ல் வெண்மை நிற அழகிய தோல் உள்ள மனிதர் அப்போது ஆமிர் “இன்று நான் பார்த்ததைப் போன்று வேறு எப்போதும் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணின் தோலைக் கூடப் பார்த்ததில்லை என்று கூறினார். உடனே அவ்விடத்தில் ஸஹ்ல் (ரலி) அவர்களுக்கு முடியாமல் போனது. அவருக்கு காய்ச்சல் கடுமையானது. இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று ஸஹ்ல் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் உங்களுடன் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

உடனே அவரிடம் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். ஆமிர் நடந்து கொண்ட விதம் பற்றி ஸஹ்ல் (ரலி) அவர்கள் இறைத் தூதரிடம் தெரிவித்தார்கள். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் ஏன் தன் சகோதரனை கொல்ல வேண்டும்? நீங்கள் (அவரிடம் விரும்பத்தக்க விஷயத்தைப் பார்க்கும் போது அவருக்காக) பரக்கத்தை வேண்டியிருக்கக் கூடாதா? கண்ணேறு என்பது உண்மையே. (ஆமிரே) நீங்கள் உளூச் செய்து அந்த நீரை ஸஹ்ல் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள். ஆமிர் (ரலி) அவர்கள் உளூச் செய்து அந்நீரை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இதன் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு சென்றார்கள்.

அறிவிப்பவர் :  அஸ்அத் பின் ஸஹ்ல் (அபூ உமாமா-ரலி)

(முஅத்தா மாலிக்: 2707)

36- الْوُضُوءُ مِنَ الْعَيْنِ.

وَحَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ يَقُولُ:

اغْتَسَلَ أَبِي سَهْلُ بْنُ حُنَيْفٍ بِالْخَرَّارِ، فَنَزَعَ جُبَّةً كَانَتْ عَلَيْهِ، وَعَامِرُ بْنُ رَبِيعَةَ يَنْظُرُ، قَالَ: وَكَانَ سَهْلٌ رَجُلاً أَبْيَضَ، حَسَنَ الْجِلْدِ، قَالَ: فَقَالَ لَهُ عَامِرُ بْنُ رَبِيعَةَ: مَا رَأَيْتُ كَالْيَوْمِ، وَلاَ جِلْدَ عَذْرَاءَ، قَالَ: فَوُعِكَ سَهْلٌ مَكَانَهُ، وَاشْتَدَّ وَعْكُهُ، فَأُتِيَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَأُخْبِرَ أَنَّ سَهْلاً وُعِكَ، وَأَنَّهُ غَيْرُ رَائِحٍ مَعَكَ يَا رَسُولَ اللهِ، فَأَتَاهُ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَأَخْبَرَهُ سَهْلٌ بِالَّذِي كَانَ مِنْ شَأْنِ عَامِرٍ، فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: عَلاَمَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ، أَلاَّ بَرَّكْتَ، إِنَّ الْعَيْنَ حَقٌّ، تَوَضَّأْ لَهُ، فَتَوَضَّأَ لَهُ عَامِرٌ، فَرَاحَ سَهْلٌ مَعَ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، لَيْسَ بِهِ بَأْسٌ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-1471.
Muwatta-Malik-Shamila-2707.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




மேலும் பார்க்க: இப்னு மாஜா-3509 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.