தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1344

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஸலாம் கூறி (தொழுகையை முடித்த பின்) ஓத வேண்டிய மற்றொரு பிரார்த்தனை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையில் அமர்ந்து எழும்போதும், அல்லது தொழுகையை நிறைவு செய்த போதும் சில வார்த்தைகளை கூறுவார்கள்.

அதைப் பற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, “ஒருவர் சபையில் நல்வார்த்தைகள் பேசியிருந்து இந்த வார்த்தைகளைக் கூறினால் இவை அவைகளுக்கு முத்திரையாக மறுமைநாள் வரை (பாதுகாப்பாக) இருக்கும். அவர் நல்லது அல்லாத வேறு எதையும் பேசியிருந்தால் இந்த வார்த்தைகள் அவைகளுக்கு (பாவ) பரிகாரமாக இருக்கும் என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளைக் கூறினார்கள்:

“சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க, அஸ்தக்ஃபிருக்க வ அதூபு இலைக்க.

(பொருள்: யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(நஸாயி: 1344)

نَوْعٌ آخَرُ مِنَ الذِّكْرِ بَعْدَ التَّسْلِيمِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ الصَّاغَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ الْخُزَاعِيُّ مَنْصُورُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا خَلَّادُ بْنُ سُلَيْمَانَ، قَالَ أَبُو سَلَمَةَ وَكَانَ مِنَ الْخَائِفِينَ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ مَجْلِسًا أَوْ صَلَّى تَكَلَّمَ بِكَلِمَاتٍ، فَسَأَلَتْهُ عَائِشَةُ عَنِ الْكَلِمَاتِ، فَقَالَ: «إِنْ تَكَلَّمَ بِخَيْرٍ كَانَ طَابِعًا عَلَيْهِنَّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَإِنْ تَكَلَّمَ بِغَيْرِ ذَلِكَ كَانَ كَفَّارَةً لَهُ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1344.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1328.




1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக இப்னு ஜுரைஜ் அறிவித்த செய்திகளை அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஸுர்ஆ, அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

2 . காரணம் இந்த செய்தியை ஸுஹைல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உஹைப் அவர்கள், அவ்ன் பின் அப்துல்லாஹ் அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளார். எனவே இதில் இப்னு ஜுரைஜ் தவறிழைத்திருக்க வேண்டும். இப்னு ஜுரைஜ், மூஸா பின் உக்பாவிடம் செவியேற்கவில்லை. இடையில் பலவீனமானவரை நீக்கி மூஸா பின் உக்பா விடமிருந்து கேட்டதாக அறிவித்துள்ளார் என இமாம் அஹ்மத்  கூறியதாக தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (நூல்: அல்இலலுல் வாரிதா 8/203 )

3 . அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ போன்றோரும் இந்தக் கருத்தை ஏற்று இந்த செய்தியை விமர்சித்துள்ளனர். (நூல்: இலலுல் ஹதீஸ்-2078). அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களின் கருத்து, இந்த கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்கள் வழியாக சரியான அறிவிப்பாளர்தொடரில் ஹதீஸ் இல்லை என்பதாகும்.

4 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்களும், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாமின் கருத்தின் பிரகாரம் இந்த செய்தியை விமர்சித்துள்ளார். ஆனால் இதை எடுத்துக் கூறிய ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள், தனது மஃரிஃபது உலூமில் ஹதீஸ் என்ற நூலில் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்கள், உலகத்தில் இந்த கருத்தில் வந்துள்ள வேறு எந்த (சரியான) செய்தியையும் நான் அறியமாட்டேன். அனைத்திலும் குறை உள்ளது எனக் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். (மஃரிஃபது உலூமில் ஹதீஸ்-பக்கம் 114 )

5 . ஆனால் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் விமர்சித்தது இப்னு ஜுரைஜ் அறிவிக்கும் செய்தியைத் தான் என்று, முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாமுக்கும், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாமுக்கும் நடந்த உரையாடல் மூலம் தெரிய வருகிறது. முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களிடம், இப்னு ஜுரைஜ் , மூஸா பின் உக்பாவிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரை குறிப்பிட்டு உலகத்தில் இதை விட சிறந்த அறிவிப்பாளர்தொடர் உள்ளதா? என கேட்க , புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இதிலே குறையிருக்கிறது என்று கூறி ஸுஹைலிடமிருந்து, உஹைப் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடர் தான் உண்மை என கூறினார்கள்.

(நூல்: அல்இர்ஷாத் ஃபீ மஃரிஃபதி உலமாஇல் ஹதீஸ் 3/ 961)

6 . மேற்கண்ட விபரங்களை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டு விட்டு புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்கள், இந்த கருத்தில் வரும் அனைத்து செய்திகளையும் குறையுள்ளது என்று கூறவில்லை. இப்னு ஜுரைஜ் மூலம் வந்துள்ள செய்தியைத் தான் குறையுள்ளது என கூறியுள்ளார் என தெளிவுபடுத்துகிறார். மேலும் இந்த கருத்தில் வேறு நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகளை குறிப்பிட்டு எவை சரியானவை, எவை பலவீனமானவை என்பதை தனது ஃபத்ஹுல் பாரியின் இறுதியில் கூறியுள்ளார்.  ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களின் தவறை தனது நிகத் என்ற நூலிலும் சுட்டிக்காட்டியுள்ளார். (அந்நிகத் 2/716)

7 . தனது ஃபத்ஹுல் பாரீயை மேற்கண்ட ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் வழியாக வரும் செய்தியின் அறிவிப்பாளர்தொடரை கூறியே நிறைவு செய்கிறார். (ஃபத்ஹுல்பாரீ 13/553).

8 . முக்பில் பின் ஹாதீ அவர்களும் இந்த செய்தியை சரியானது என கூறி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் கூற்றை ஆதாரமாக கூறியுள்ளார். (அஹாதீஸு முஅல்லஹ்-461)

(புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்களின் கருத்தை தவறாக விளங்கிய சிலர் இந்த கருத்தில் வரும் அனைத்து செய்திகளையும் பலவீனம் எனக் கூறுகின்றனர்)

சரியான செய்திகளில் சிலவை: பார்க்க: அஹ்மத்-15729 , நஸாயீ-1344 ,

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24486 , நஸாயீ-1344 , குப்ரா நஸாயீ-126810067 , 10158 , 1015910160 , ஹாகிம்-1827 ,

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3433 .

3 . அபூபர்ஸா அல் அஸ்லமி (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4859 .

4 . ஸாயிப் பின் யஸீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-15729 .

5 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4857 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.