தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3773

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கஅபாவின் மீது சத்தியம் செய்தல்.

ஜுஹைனா குலத்தைச் சார்ந்த குதைலா என்ற பெண்மணியிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யூதர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, திண்ணமாக நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றீர்கள். நீங்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகின்றீர்கள். “(ஏனெனில்) நீங்கள், “மாஷா அல்லாஹு, வ ஷிஃத்த (அல்லாஹ் நாடியதும் நீ நாடியதும்) என்று சொல்கின்றீர்கள். “வல்கஅபத்தி” (கஅபாவின் மீது சத்தியமாக) என்று கூறுகின்றீர்கள்” எனச் சொன்னார்.

ஆகவே (அவர் இவ்வாறு சொல்லிவிட்டதால்) நபி (ஸல்) அவர்கள், (இனி என் தோழர்களாகிய) அவர்கள் சத்தியம் செய்தால், “வ ரப்பில் கஅபத்தி” (கஅபாவின் இறைவன்மீது சத்தியமாக) என்றும், “மாஷா அல்லாஹ், ஸும்ம ஷிஃத” (அல்லாஹ் நாடினான், பிறகு இன்னார் நாடினார்) என்றும் கூறவேண்டும் எனக் கட்டளையிட்டார்கள்.

(நஸாயி: 3773)

الْحَلِفُ بِالْكَعْبَةِ

أَخْبَرَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، عَنْ قُتَيْلَةَ، امْرَأَةٍ مِنْ جُهَيْنَةَ:

أَنَّ يَهُودِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّكُمْ تُنَدِّدُونَ، وَإِنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ، وَتَقُولُونَ: وَالْكَعْبَةِ، ” فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا: وَرَبِّ الْكَعْبَةِ، وَيَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ، ثُمَّ شِئْتَ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-3713.
Nasaayi-Shamila-3773.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3736.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த பெண்மணியான குதைலா பின்த் ஸைஃபீ அவர்களை இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இப்னு அப்துல்பர், இப்னுஹஜர் போன்ற பலர் நபித்தோழியரின் பட்டியலில் கூறியுள்ளனர்.
  • சிலர் விசயத்தில் இவர் நபித்தோழரா? இல்லையா? என்ற கருத்துவேறுபாடு இருக்கும். ஆனால் இவர் விசயத்தில் அப்படி ஏதும் அறிஞர்களிடம் கருத்துவேறுபாடு இல்லை.

الطبقات الكبرى – ط العلمية (8/ 238):
4272 – ‌قتيلة بنت ‌صيفي الجهنية.
أسلمت وروت عن رسول الله صلى الله عليه وسلم حديثا.
أخبرنا وكيع بن الجراح ومحمد بن عبيد عن المسعودي عن معبد بن خالد عن عبد الله بن يسار عن ‌قتيلة بنت ‌صيفي قالت: جاء حبر من الأحبار إلى النبي صلى الله عليه وسلم.
فقال: يا محمد نعم القوم أنتم لولا أنكم تشركون. فقال له النبي صلى الله عليه وسلم:، وكيف؟، قال: يقول أحدكم لا والكعبة. فقال النبي صلى الله عليه وسلم:، إنه قد قال فمن حلف فليحلف برب الكعبة،. فقال: يا محمد نعم القوم أنتم لولا أنكم تجعلون لله ندا. قال:، وكيف ذاك؟، قال: يقول أحدكم ما شاء وشئت. فقال النبي صلى الله عليه وسلم:، إنه قد قال فمن قال منكم فليقل ما شاء الله ثم شئت

இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள், குதைலா அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியை பதிவு செய்து, அதன் அடிப்படையில் தான் இவரை நபித்தோழியர் பட்டியலில் கூறியுள்ளார்.

(நூல்: தபகாதுல் குப்ரா-4272)

الجامع لعلوم الإمام أحمد – الرجال (16/ 124):
‌‌182 – وممن روى عنه صلى الله عليه وسلم من الكوفيين …
وقتيلة بنت صيفي حديثها: “ما شاء اللَّه ثم شئت”

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள், கூஃபாவாசிகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்தவர்களில் குதைலா அவர்களையும் கூறியுள்ளதை அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜாமிஉ லிஉலூமில் இமாம் அஹ்மத்-16/124)

இவர் ஆரம்பத்தில் மதீனாவிலிருந்து, பிறகு கூஃபாவுக்கு சென்றிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது.


1 . இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் பற்றி புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்களின் கருத்து:

العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص: 253)

457 – حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ , حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى , وَأَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَا: حَدَّثَنَا مِسْعَرٌ , عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ , عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ , عَنْ قُتَيْلَةَ , امْرَأَةٌ مِنْ جُهَيْنَةَ أَنَّ يَهُودِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّكُمْ تُنَدِّدُونَ , وَإِنَّكُمْ تُشْرِكُونَ , تَقُولُونَ مَا شَاءَ اللَّهُ وَشِئْتُ , وَتَقُولُونَ وَالْكَعْبَةِ. فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقُولُوا: وَرَبِّ الْكَعْبَةِ. وَيَقُولُ أَحَدُهُمْ مَا شَاءَ اللَّهُ , ثُمَّ شِئْتُ.

سَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ: هَكَذَا رَوَى مَعْبَدُ بْنُ خَالِدٍ , عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ , عَنْ قُتَيْلَةَ.

458 – وَقَالَ مَنْصُورٌ: عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ , عَنْ حُذَيْفَةَ , قَالَ مُحَمَّدٌ: حَدِيثُ مَنْصُورٍ أَشْبَهُ عِنْدِي وَأَصَحُّ

மேற்கண்ட செய்தியை அப்துல்லாஹ் பின் யஸாரிடமிருந்து அறிவிக்கும் மஃபத் பின் காலித் அவர்கள் அப்துல்லாஹ் பின் யஸார் —> குதைலா பின்த் ஸைஃபீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

அப்துல்லாஹ் பின் யஸாரிடமிருந்து அறிவிக்கும் மன்ஸூர் அவர்கள், அப்துல்லாஹ் பின் யஸார் —> ஹுதைஃபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

இவ்விரண்டில், மன்ஸூர் அவர்கள் அறிவிக்கும் செய்தியே என்னுடைய பார்வையில் மிகச் சரியானது என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கூறியதாக திர்மிதீ அவர்கள் அறிவித்துள்ளார்.

(நூல்: இலலுத் திர்மிதீ-457, 458)

2 . இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் அவர்களின் கருத்து:

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية ط-أخرى (9/ 420)

4112- وسُئِل عَن حَديث قتيلة بنت صيفي الجهنية، عن النَّبي صَلى الله عَليه وسَلم أَنه جاءه يهودي، فقال: تقولون لا والكعبة، وتقولون ما شاء الله وشئت …
فقال: يَرويه عَبد الله بن يسار، عن قتيلة،

واختُلِفَ عنه؛ فرواه معبد بن خالد، عن عَبد الله بن يسار، عن قتيلة.
وخالفهما مغيرة بن مقسم؛ رَواه عن معبد بن خالد، عن قتيله، ولم يذكر عَبد الله بن يسار، وذكر فيه عائشة وأنها سأَلت النَّبي صَلى الله عَليه وسَلم.
ورَواه جابر الجُعفي عن عَبد الله بن يسار عَن عَائشة عن النَّبي صَلى الله عَليه وسَلم، ولم يذكر (1) قتيلة.
(ورواه منصور بن المعتمر، عن عَبد الله بن يسار، عن حذيفة بن اليمان، عن النَّبي صَلى الله عَليه وسَلم. وأشبهها بالصواب حديث قتيلة) (2) من رواية مِسعَر، والمسعودي، عن معبد بن خالد.

மேற்கண்ட செய்தியின் பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களைக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவற்றில் மிஸ்அர் பின் கிதாம், அப்துர்ரஹ்மான் அல்மஸ்ஊதீ ஆகியோர் அறிவிக்கும் மஃபத் பின் காலித் —> அப்துல்லாஹ் பின் யஸார் —> குதைலா பின்த் ஸைஃபீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-4112)

1 . இந்தக் கருத்தில் குதைலா பின்த் ஸைஃபீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மஃபத் பின் காலித் —> அப்துல்லாஹ் பின் யஸார் —> குதைலா பின்த் ஸைஃபீ (ரலி)

பார்க்க: அஹ்மத்-27093 , குப்ரா நஸாயீ-4696 , 10756 , நஸாயீ-3773 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-238 , 824 , அல்முஃஜமுல் கபீர்-05 , 06 , 07 , ஹாகிம்-7815 , குப்ரா பைஹகீ-5811 ,

  • மஃபத் பின் காலித் —> குதைலா பின்த் ஸைஃபீ (ரலி)

பார்க்க: குப்ரா நஸாயீ-10757 ,


2 . ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2118 .

3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2117 .

4 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10468 .

5 . இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
(ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26689 .

5 comments on Nasaayi-3773

  1. அஸ்ஸலாமு அலைக்கும் ,

    இதில் இடம் பெறும் குதைலா பின்த் ஸைஃபீ (ரலி) அவர்கள் சஹாபிய பெண்மணி என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை எனவே இது பலஹீனமான செய்தி என்று விமர்சனம் வைக்கப்படுகிறது.விளக்கம் தரவும்

    1. வ அலைக்கும் ஸலாம்.

      நாம் பார்த்த வரை இப்னு ஸஃத் முதல் இப்னு ஹஜர் வரை பல அறிஞர்கள் இவரை நபித்தோழியர் பட்டியலில் கூறியுள்ளனர். அஹ்மத் இமாம் அவர்கள், கூஃபாவாசிகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்தவர்களில் இவரையும் கூறியுள்ளார். இவர் இந்த ஒரு செய்தியை மட்டும் அறிவித்துள்ளார். வெளிப்படையில் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்காததைப் போன்று தெரிவதால் சிலர் இப்படி கூறியுள்ளனர் என்று தெரிகிறது. இது நிகழ்வை கூறும் செய்தி என்பதால் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக வார்த்தை இல்லை. இவர் நபித்தோழி இல்லை என்பதற்கு கூறப்படும் சான்றை பதிவு செய்யவும்.

      1. தங்களின் விளக்கத்திற்கு நன்றி, குதைலா பின்த் ஸைஃபீ (ரலி) அவர்களை அப்துல்லாஹ் பின் யஸார் அவர்கள் தான் சஹாபியாக அறிமுகம் செய்கிறார்கள் அதன் காரணமாக சஹாபி என்று சொல்கிறார்கள் ஆனால் அப்துல்லாஹ் பின் யஸார் அவர்கள் யார் என அறியப்படாதவர் என்று சிலர் சொல்கிறார்கள் என்று நான் புரிந்த வரையில் சொல்கிறேன்.இது கீழ் காணும் வீடீயோவில் கேட்டேன் அதை வைத்து தங்களிடம் கேட்டேன் , தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

        https://youtu.be/mIeVKjRm6TE?list=PL_UN52fK6-HvFn_Ft1KwEMe87BtI1DP5u&t=3156

        1. இப்னு ஸஃத் அவர்கள், குதைலா அவர்கள் அறிவிக்கும் செய்தியை பதிவு செய்து, அதன் அடிப்படையில் தான் இவரை நபித்தோழியர் பட்டியலில் கூறியுள்ளார். முஜாஹித் அவர்கள் கூறியது போன்று அப்துல்லாஹ் பின் யஸார் கூறும் குறிப்பை வைத்து அல்ல என்று தெரிகிறது.
          அஹ்மத் இமாம் அவர்கள், கூஃபாவாசிகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்தவர்களில் குதைலாவையும் கூறியுள்ளார். இவர் ஆரம்பத்தில் மதீனாவிலிருந்து, பிறகு கூஃபாவுக்கு சென்றிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது.

          எனவே முஜாஹித் அவர்கள் கூறும் விமர்சனங்கள் தேவையற்றது.

          அப்துல்லாஹ் பின் யஸார் அல்ஜுஹனீ, அல்கூஃபீ அவர்களிடமிருந்து பல பலமானவர்கள் அறிவித்துள்ளனர். இவரிடமிருந்து மன்ஸூர் பின் முஃதமிர் அறிவித்துள்ளார். (மன்ஸூர் பற்றி அபூதாவூத் அவர்கள், இவர் பலமானவர்களிடமிருந்து மட்டுமே அறிவிப்பார் என்று கூறியுள்ளார்). நஸாயீ அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார். எனவே இப்னு மயீன் அவர்கள் இவரை நான் அறியவில்லை என்று கூறியிருப்பது விமர்சனமாகாது. அப்துல்லாஹ் பின் யஸார் என்ற பெயரில் பலர் உள்ளனர். இவர்கள் விசயத்தில் சிலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்கிறோம்.

          1. தங்களின் விளக்கத்திற்கு நன்றி சகோதரரே

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.