தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tabaqatul-Kubra-Ibn-Sahd-2247

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் அவர்கள் எத்தனை நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள்; எந்த நாளில் மரணித்தார்கள்?

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ஸஃபர் மாதம் 11 ஆம் நாள், புதன்கிழமை இரவு நோயுற்றார்கள். 13 இரவுகள் (நாட்கள்) இவ்வாறு நோயுற்றிருந்தார்கள். ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ரபீஉல் அவ்வல் மாதம் 3 ஆம் நாள், திங்கள்கிழமை மரணித்தார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் கைஸ்.

(tabaqatul-kubra-ibn-sahd-2247: 2247)

ذِكرُ كَم مَرِضَ رَسولُ الله صَلى الله عَليه وسَلم، واليَوم الَّذي توُفّيَ فيه

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ، حَدَّثَنِي أَبُو مَعْشَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ:

«أَنَّ رَسُولَ اللَّهِ صلّى الله عليه وسلم اشْتَكَى يَوْمَ الْأَرْبِعَاءِ لِإِحْدَى عَشْرَةَ لَيْلَةً بَقِيَتْ مِنْ صَفَرٍ سَنَةَ إِحْدَى عَشْرَةَ، فَاشْتَكَى ثَلَاثَ عَشْرَةَ لَيْلَةً , وَتُوُفِّيَ صلّى الله عليه وسلم يَوْمَ الِاثْنَيْنِ لِلَيْلَتَيْنِ مَضَتَا مِنْ شَهْرِ رَبِيعٍ الْأَوَّلِ سَنَةَ إِحْدَى عَشْرَةَ»


Tabaqatul-Kubra-Ibn-Sahd-Tamil-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-TamilMisc-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-Shamila-2247.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-Alamiah-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-JawamiulKalim-2153.




إسناد موضوع لأن به موضع إرسال ، وفيه متهم بالوضع وهو محمد بن عمر الواقدي (جوامع الكلم)

  • இந்தச் செய்தியை அறிவிக்கும் ராவீ-42180-முஹம்மத் பின் கைஸ் அல்காஸ் என்பவர் நபித்தோழர் அல்ல.
  • மேலும் இவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-46292-அபூமஃஷர்-நஜீஹ் பின் அப்துர்ஹ்மான் என்பவர் பலவீனமானவர்.
  • மேலும் இதில் வரும் ராவீ-41876-முஹம்மத் பின் உமர் அல்வாகிதீ என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டவர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-7150, தஹ்தீபுத் தஹ்தீப்-3/656, தக்ரீபுத் தஹ்தீப்-1/882)

எனவே இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த, மிக பலவீனமான செய்தியாகும்.

  • நபி (ஸல்) அவர்கள், இறுதிக்காலத்தில் கடுமையான நோயில் பாதிக்கப்பட்ட்டது உண்மை. ஆனால் அது சஃபர் மாதம் என்பதற்கும் புதன் கிழமை என்பதற்கும் ஆதாரம் இல்லை.
  • மேலும் குறிப்பிட்ட நாளில் நோயுற்றதால் அந்த நாள் பீடை என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஸஃத்-2247, 2248 , பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
– தலாஇலுன் நுபுவ்வஹ்-3181 ,

more hadees…

கூடுதல் தகவல் பார்க்க: நபி (ஸல்) அவர்களுக்கு ஸஃபர் மாதத்தில்தான் நோய் ஏற்பட்டதா? .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.