தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1189

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒரு பெண் எனக்கு மனைவியாக இருந்தாள். நான் அவளை நேசித்தேன். ஆனால் என் தந்தை (உமர்) அவளை வெறுத்தார். அவளை நான் தலாக் விட வேண்டும் என எனக்கு உத்தரவிட்டார். இதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்தப் போது அவர்கள் அப்துல்லாஹ் பின் உமரே உனது மனைவியை நீ தலாக் செய்துவிடு என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(திர்மதி: 1189)

بَابُ مَا جَاءَ فِي الرَّجُلِ يَسْأَلُهُ أَبُوهُ أَنْ يُطَلِّقَ زَوْجَتَهُ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ قَالَ: أَنْبَأَنَا ابْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ الحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ:

كَانَتْ تَحْتِي امْرَأَةٌ أُحِبُّهَا، وَكَانَ أَبِي يَكْرَهُهَا، فَأَمَرَنِي أَبِي أَنْ أُطَلِّقَهَا، فَأَبَيْتُ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، طَلِّقْ امْرَأَتَكَ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ إِنَّمَا نَعْرِفَهُ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي ذِئْبٍ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1110.
Tirmidhi-Shamila-1189.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1106.




إسناده حسن رجاله ثقات عدا الحارث بن عبد الرحمن القرشي وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10930-ஹாரிஸ் பின் அப்துர் ரஹ்மான் அல்குரஷீ அவர்களைப் பற்றி இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள், இவரிடமிருந்து இவரின் உறவினர் முஹம்மது பின் அபூதிஃப் மட்டுமே அறிவித்துள்ளார். எனவே இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளார்.
  • அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவரை பற்றி  لا بأس به- இவரிடம் பிரச்சனை இல்லை எனக் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1/333)

  • தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் இவரை ஸதூக் என்ற வகையினரில் குறிப்பிட்டுள்ளனர். ஷுஐப் அவர்கள் இதை பலமான அறிவிப்பாளர்தொடர் என்றும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் ஹஸன் தரத்தில் அமைந்த செய்தி என்றும் கூறியுள்ளனர்.

எனவே மேற்கண்ட செய்தி (ஆதாரத்திற்கேற்ற) ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-5011 , 5144 , 6470 , இப்னு மாஜா-2088 , அபூதாவூத்-5138 , திர்மிதீ-1189 , …

2 . ஹம்ஸா பின் அப்துல்லாஹ் பின் உமர் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-426 .

கூடுதல் தகவல் பார்க்க: பெற்றோருக்குப் பிடிக்காவிட்டால் மனைவியை தலாக் சொல்லலாமா? .

3 comments on Tirmidhi-1189

  1. இந்த ஹதீஸின் தரம் போடப்படவில்லை( திர்மீதி-1189)
    தெரிய விரும்புகிறேன்

  2. இவரை நம்பகமானவர் பட்டியலில் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) சேர்த்துள்ளார்கள் என்று இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்

    தர்கீப் அல் தஹ்தீப-146

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.