தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1341

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதாரம் காட்டுவது வழக்குத்தொடுப்பவரின் (வாதிப்பவரின்) மீதுள்ள கடமையாகும். சத்தியம் (செய்யும் உரிமை), யாருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதோ அவரின் மீதுள்ள கடமையாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(திர்மதி: 1341)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَغَيْرُهُ، عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي خُطْبَتِهِ: «البَيِّنَةُ عَلَى المُدَّعِي، وَاليَمِينُ عَلَى المُدَّعَى عَلَيْهِ»

هَذَا حَدِيثٌ فِي إِسْنَادِهِ مَقَالٌ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ العَرْزَمِيُّ يُضَعَّفُ فِي الحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ، ضَعَّفَهُ ابْنُ المُبَارَكِ، وَغَيْرُهُ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1341.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1257.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-40965-முஹம்மது பின் உபைதுல்லாஹ் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் ஆவார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-6148)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-15184 , திர்மிதீ-1341 , தாரகுத்னீ-4311 , 4509 , குப்ரா பைஹகீ-21221 , 21222 ,

2 . தாரகுத்னீ-3191 , 3192 , 4508 , குப்ரா பைஹகீ-16445 , 16446 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.