தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1977

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

(திர்மதி: 1977)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَيْسَ المُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الفَاحِشِ وَلَا البَذِيءِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1900.
Tirmidhi-Shamila-1977.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1896.




  • இந்த செய்தி அஃமஷ் அவர்கள் வழியாக இப்ராஹீம் —> அல்கமா —> இப்னு மஸ்வூத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது முன்கர்-தவறு என்றும், அஃமஷ் இடம்பெறாமல் அபூவாயில் —> இப்னு மஸ்வூத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பதே உண்மை என்றும் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள் விமர்சித்துள்ளார்கள் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-262 (3/567)

  • அபூவாயில் வழியாக வரும் செய்திகளில் நபித்தோழரின் கூற்றாக வந்திருப்பது தான் உண்மை என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் கூறியுள்ளார். (நூல்: அல்இலலுல் வாரிதா-738)
  • மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-39078-முஹம்மது பின் ஸாபிக் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். (இவர் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பாளர் ஆவார்). இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள்,  இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவரின் சில ஹதீஸ்களை பலவீனமானது எனக் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
  • என்றாலும் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் இவரை பலமானவர் எனக் கூறியுள்ளார். யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
    இறப்பு ஹிஜ்ரி 262
    வயது: 80
    முஹம்மது பின் ஸாலிஹ், நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவரை சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/567)

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இவரை விமர்சிப்பவர்கள் சரியான காரணத்தை கூறவில்லை என்பதால் குறைந்த பட்சம் முஹம்மது பின் ஸாபிக் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று கூறியுள்ளார். இந்த செய்தி இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வேறு பலமான அறிவிப்பாளர்தொடரிலும் வந்திருப்பதால் இது முன்கர் அல்ல என்றும் கூறியுள்ளார். (அந்த செய்தி பார்க்க: அஹ்மத்-3948 )

(நூல்: அஸ்ஸஹீஹா-320)

  • இந்தசெய்தி சரியான அறிவிப்பாளர்தொடரிலும் வந்திருப்பதால் மற்ற பலவீனமான அறிவிப்பாளர்தொடர்கள் ஸஹீஹுன் லிகைரீ என்ற தரத்தில் அமையும்.

1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்ராஹீம் —> அல்கமா —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30338 , அஹ்மத்-3839 , அல்அதபுல் முஃப்ரத்-332 , திர்மிதீ-1977 , முஸ்னத் பஸ்ஸார்-1523 , 3207 , முஸ்னத் அபீ யஃலா-5369 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1814 , ஹாகிம்-29 , 31 , குப்ரா பைஹகீ-21140 ,

  • அப்துர்ரஹ்மான் பின் யஸீத் —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-3948 , அல்அதபுல் முஃப்ரத்-312 , முஸ்னத் பஸ்ஸார்-1914 , 1915 , முஸ்னத் அபீ யஃலா-5088 , 5379 , இப்னு ஹிப்பான்-192 , அல்முஃஜமுல் கபீர்-10483 , ஹாகிம்-30 , குப்ரா பைஹகீ-20794 ,

  • அல்அஸ்வத் பின் யஸீத் —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3206 ,

2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13063 .

3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-4787 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.