தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1990

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் நபித்தோழர்களில்) சிலர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எங்களிடத்தில் நகைச்சுவையாக பேசி) எங்களை சிரிக்கவைக்கிறீர்களே? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(திர்மதி: 1990)

حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الحَسَنِ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:

قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تُدَاعِبُنَا، قَالَ: «إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا»

هَذَا حَدِيثٌ حَسَنٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1913.
Tirmidhi-Shamila-1990.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1909.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-6786-உஸாமா பின் ஸைத் அல்லைஸீ அவர்கள் இடம்பெறும் செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்றோர் துணை சான்றாக கூறியுள்ளனர்.
  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் ஆரம்பத்தில் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தாலும் பின்னால் அவரின் செய்திகளை நான் இனி அறிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். இவரின் கருத்தையே இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் போன்றோர் ஏற்றுள்ளனர்.
  • இமாம் இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
    இறப்பு ஹிஜ்ரி 321
    வயது: 83
    போன்றோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள், இவர் மதீனாவாசிகளிடம் நம்பிக்கைக்குரிய, பலமானவர் என்று கூறியதாக பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில இடங்களில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவரின் செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்றோர் துணை ஆதாரமாகக் கூறியுள்ளனர். எனவே இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் எனக் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/108, தக்ரீபுத் தஹ்தீப்-1/124, ஸியரு அஃலாமின் நுபலா-145)

மேலும் இந்த செய்தியை மற்றவர்களும் அறிவித்துள்ளனர் என்பதால் இது ஸஹீஹுன் லிகைரீ ஆகும்.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8481 , 8723 , அல்அதபுல் முஃப்ரத்-265 , திர்மிதீ-1990 , குப்ரா பைஹகீ-21173 , 21174 , 21175 ,

  • ஸயீத் அல்மக்புரீ —> கைஸான் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8706 ,

2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13443 .

….

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7020 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.