தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2810

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

வெள்ளை ஆடை அணிவது பற்றி வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளை ஆடையை அணியுங்கள். ஏனென்றால், அது மிகத் தூய்மையானது. மிக நல்லது. அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா (ரலி)

(திர்மதி: 2810)

بَابُ مَا جَاءَ فِي لُبْسِ البَيَاضِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«البَسُوا البَيَاضَ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَفِي البَابِ عَنْ ابْنِ عَبَّاسٍ، وَابْنِ عُمَرَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2734.
Tirmidhi-Shamila-2810.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2753.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46072-மைமூன் பின் அபூஷபீப் பற்றி இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள், இவரின் நிலை பற்றி நமக்கு தெரியவில்லை என்றும், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் ஸாலிஹுல் ஹதீஸ்-(சுமாரானவர்-தனித்து அறிவித்தால் ஏற்கக் கூடாது) என்றும், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவர் ஸதூக்-நம்பகமானவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் அதிகமாக, நபித்தோழர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்காமல் அன்அனா வாக-முர்ஸலாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/197, தக்ரீபுத் தஹ்தீப்-7095, அல்காஷிஃப்-5761)

  • அம்ர் பின் அலி அல்ஃபல்லாஸ் என்ற அறிஞர், இவர் சில நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். ஆனால் அவற்றில் எதிலும் ஸமிஃது-நான் நேரடியாக கேட்டேன் என்று அறிவிக்கவில்லை. மேலும், மற்ற அறிஞர்களில் யாரும் இவர் நபித்தோழர்களிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளார் என்றும் எனக்கு அறிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-6335 , துஃபதுத் தஹ்ஸீல்-1088)

  • அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார். என்றாலும் இப்னு ஸலாஹ் அவர்கள், இது சரியானதல்ல. இவர் முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்களையே சந்தித்துள்ளார். முகீரா (ரலி) அவர்கள், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) க்கு முன்பே மரணமடைந்து விட்டவர் என்பதால் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களையும் சந்தித்திருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
  • அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் முஆத் பின் ஜபல், அலீ, அபூதர் போன்ற நபித்தோழர்களிடமிருந்து அறிவிப்பது முர்ஸல் என்று கூறியுள்ளார்.

(நூல்: துஃபதுத் தஹ்ஸீல்-1088)

என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இவரின் இறப்பு ஹிஜ்ரீ 83, ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
அவர்களின் இறப்பு ஹிஜ்ரீ 57, என்பதால் இருவருக்குமிடையில் 26 வருடங்களே வித்தியாசம் உள்ளது என்பதால் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஹதீஸ்களை கேட்டார்களா என்பது வேறு விஷயம். ஆனால் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், நபித்தோழர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஸன் பஸரீ, இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
போன்ற-மூத்த, இளைய தாபிஈன்களுக்கு இடைப்பட்டவர்களின் பட்டியலில் இவரை கூறியுள்ளார் என்பதே என்னுடைய கூற்றை பலப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-1528)

  • முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் தனது முன்னுரையில் இவர், முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரை கூறியுள்ளார்.

மேற்கண்ட தகவல்படி இவரின் செய்திகளை சிலர் முர்ஸல் என்றும், சிலர் சரியானது என்றும் கூறுகின்றனர்.

  • இந்தக் கருத்தில் வேறு சரியான அறிவிப்பாளர்தொடர்களிலும் ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: அஹ்மத்-20235 )

1 . இந்தக் கருத்தில் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மைமூன் பின் அபூஷபீப் —> ஸமுரா (ரலி) 

பார்க்க: அஹ்மத்-20154 , 20185 , 20200 , 20218 , இப்னு மாஜா-3567 , திர்மிதீ-2810 ,

  • அபூகிலாபா —> ஸமுரா (ரலி) 

பார்க்க: அஹ்மத்-20105 , 20140 , 20236 , நஸாயீ-5323 ,

  • அபூகிலாபா —> அபுல் முஹல்லப் —> ஸமுரா (ரலி) 

பார்க்க: அஹ்மத்-20235 , நஸாயீ-1896 , 5322 ,

  • அபூகிலாபா —> இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) , ஸமுரா (ரலி) 

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-560 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-994 .

3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13100 .

இன்ஷா அல்லாஹ் கூடுதல் தகவல்  பிறகு சேர்க்கப்படும்…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.