தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2910

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

குர்ஆனிலுள்ள ஓர் எழுத்தை ஓதியவருக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது தொடர்பாக வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு எழுத்தைப் படிக்கிறாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கிறது. ஒரு நன்மை என்பது அது போன்று பத்து மடங்காகும். ‘‘அலிஃப் லாம் மீம்” என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். மாறாக. ‘அலிஃப்’ ஒரு எழுத்து ‘லாம்’ ஒரு எழுத்து, ‘மீம்’ ஒரு எழுத்து ஆகும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த அறிவிப்பாளர்தொடர் ஹஸன் ஸஹீஹ் ஃகரீப் என்ற தரத்தில் அமைந்ததாகும்.

இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபுல்அஹ்வஸும் அறிவித்துள்ளார். இதைச் சிலர் நபியின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர். சிலர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர்.

இதில் வரும் அறிவிப்பாளர் முஹம்மது பின் கஅப் அல்குரழீ (ரஹ்) அவர்கள் குறித்து, குதைபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றுள்ளேன்:

முஹம்மது பின் கஅப் அல்குரழீ (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் பிறந்தார்கள்; அவருக்கு அபூஹம்ஸா என்ற குறிப்பு பெயர் கூறப்படுகிறது என்றத் தகவல் எனக்குக் கிடைத்தது.

(திர்மதி: 2910)

بَابُ مَا جَاءَ فِيمَنْ قَرَأَ حَرْفًا مِنَ القُرْآنِ مَالَهُ مِنَ الأَجْرِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الحَنَفِيُّ قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ القُرَظِيَّ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ الم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ»

وَيُرْوَى هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ عَنْ ابْنِ مَسْعُودٍ «، رَوَاهُ أَبُو الأَحْوَصِ، عَنْ ابْنِ مَسْعُودٍ،» رَفَعَهُ بَعْضُهُمْ وَوَقَفَهُ بَعْضُهُمْ عَنْ ابْنِ مَسْعُودٍ “،: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ» سَمِعْت قُتَيْبَةَ بْنَ سَعِيدٍ، يَقُولُ: «بَلَغَنِي أَنَّ مُحَمَّدَ بْنَ كَعْبٍ القُرَظِيَّ وُلِدَ فِي حَيَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَمُحَمَّدُ بْنُ كَعْبٍ يُكْنَى أَبَا حَمْزَةَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2835.
Tirmidhi-Shamila-2910.
Tirmidhi-Alamiah-2835.
Tirmidhi-JawamiulKalim-2854.




  • சிலர் இதன் அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ (இடைமுறிந்த செய்தி) என்று கூறுகின்றனர்.
  • காரணம் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் கஅப் அவர்கள் ஹிஜ்ரீ 40 இல் பிறந்தார். இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 32 (அல்லது 33) லேயே இறந்துவிட்டார். எனவே முஹம்மது பின் கஅப் அவர்கள், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் கூறுகின்றனர்.
  • திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ள குதைபா அவர்களின் கூற்று தவறு என்றும், அவரின் குறிப்பு முஹம்மது பின் கஅப் அவர்களின் தந்தையான கஅப் பின் ஸுலைம் அல்குரழீ என்பவரைப் பற்றியது என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டுவிட்டு, கஅப் அவர்கள், பனூகுரைழா கூட்டத்தைச் சேர்ந்தவர். (கன்தக் போரில் முஸ்லிம்களின் எதிரிகளுக்கு உதவி செய்ததால்) ஹிஜ்ரீ 5 இல் (பெண்களும், குழந்தைகளும் தவிர) பனூகுரைழா கூட்டத்தினர் கொல்லப்பட்டனர். அப்போது அவர் பருவவயதை அடையாதவர் என்பதால் கொல்லப்படாமல் விடப்பட்டார் என்ற வரலாற்றுத் தகவலை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் தனது தாரீகுல் கபீரில் கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
  • மேலும் யஃகூப் பின் அபூஷைபா அவர்கள் முஹம்மது பின் கஅப் அவர்களின் பிறப்பு, அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியான ஹிஜ்ரீ 40 என்றும்; தனது 78 வது வயதில் இறந்தார் என்றும் கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் இவர் தனது 80 வது வயதில் ஹிஜ்ரீ 118 அல்லது 117 இல் இறந்தார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் கபீர்-679 (1/216), அல்இஸாபா-8574 (10/522), தஹ்தீபுத் தஹ்தீப்-3/684, அஸ்ஸிகாத்-5/351)

எனவே இவர், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களிடம் நேரடியாக இந்தச் செய்தியை கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

  • என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த வரலாற்று செய்தியை மறுக்கிறார். முஹம்மது பின் கஅப், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்போது ஸமிஃது-நான் நேரடியாக கேட்டேன் என்று கூறியிருப்பதையே ஆதாரமாக கூறியும், இந்த செய்தியை அதிகமானவர்கள் நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளனர்; இதை நபித்தோழர் சுயமாக கூறியிருக்கமுடியாது என்று கூறியும் இந்தச் செய்தியை சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-‌‌3327)

  • இந்தச் செய்தி நபியின் சொல்லாக வந்துள்ள அறிவிப்பாளர்தொடர்கள் பலவீனமாக உள்ளன. இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களின் சொல்லாகவே அதிகமானவர்கள் அறிவித்துள்ளனர். எனவே இதை நபித்தோழரின் சொல் என்று முடிவு செய்வதே பொருத்தமானது.

1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இந்தச் செய்தியையும், இந்தக் கருத்தில் உள்ள செய்திகளையும் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்கள் வழியாக பலர் அறிவித்துள்ளனர். இவைகள் மொத்தம் ஏழு வகையான அறிவிப்பாளர்தொடர்களாகும்.

அவைகளைப் பற்றிய விவரங்கள்:

1 . அபுல்அஹ்வஸ். (இவரிடமிருந்து 8 பேர் அறிவித்துள்ளனர்)

1 . அபூஹஸீன் —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)

பார்க்க: ஸயீத் பின் மன்ஸூர்-04 , அர்ரத்து-இப்னு மன்தஹ்-13 ,

  • ஸயீத் பின் மன்ஸூர்-04 இன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47782-வலீத் பின் அபூஸவ்ர் அல்ஹம்தானீ பலவீனமானவர் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/317)

  • அர்ரத்து-இப்னு மன்தஹ்-13 இன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-168-இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அஸ்ஸீனீ என்பவர் கைவிடப்பட்டவர் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் விமர்சித்துள்ளார். மேலும் இவர் முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறியுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: லிஸானுல் மீஸான்-1/236)

2 . அதாஉ பின் அபுஸ்ஸாயிப் —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)

பார்க்க: ஸயீத் பின் மன்ஸூர்-06 , தாரிமீ-3351 ,

3 . இப்ராஹீம் அல்ஹஜரீ —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத்(ரலி)

பார்க்க: ஸயீத் பின் மன்ஸூர்-07 , தாரிமீ-3358 ,

  • இவ்விரண்டின் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1180-இப்ராஹீம் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அல்அப்தீ அல்ஹஜரீ
    என்பவரை அதிகமானவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர் என்பதால் இவை பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களாகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/86)

4 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ. (இவரிடமிருந்து 6 பேர் அறிவித்துள்ளனர்)

  • முஹம்மது பின் அம்ர் —> அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) —> நபி (ஸல்).

பார்க்க: அர்ரத்து-இப்னு மன்தஹ்-11 ,

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26752-அப்துல்வாஹித், ராவீ-4391-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் உபைத்
    ஆகியோர் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • ஷரீக் பின் அப்துல்லாஹ், உமர் பின் உபைத், மஃமர், அபூஸினான், காஸிம் பின் மஃன் —> அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி).

பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னுல்முபாரக்-808 , ஃபளாஇலுல் குர்ஆன்-அபூஉபைத்-1/61 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5998 , அல்முஃஜமுல் கபீர்-8642 , ஹில்யதுல் அவ்லியா-1/130 , தாரிமீ-3350 , அக்பாரு அஸ்பஹான்-2/242 ,

  • அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ அவர்கள் வழியாக அறிவிப்பவர்களில் அதிகமானோர் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களின் கூற்றாகவே அறிவித்துள்ளனர் என்பதால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இது நபித்தோழரின் கூற்று என்று முடிவு செய்ய வேண்டும்.

5 . கதாதா —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி).

பார்க்க: ஃபளாஇலுல் குர்ஆன்-இப்னுள் ளரீஸ்-60 ,

6 . ஆஸிம் பின் அபுன்னஜூத். (இவரிடமிருந்து 4 பேர் அறிவித்துள்ளனர்) 

  • அபூயூஸுஃப், அபூஹனீஃபா,பிறப்பு ஹிஜ்ரி 80
    இறப்பு ஹிஜ்ரி 150
    வயது: 70
    அதாஉ பின் அபுர்ரபாஹ், அம்ர் பின் அபூகைஸ் —> ஆஸிம் பின் அபுன்னஜூத் —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி).

பார்க்க: அல்ஆஸார்-அபூயூஸுஃப்-222 , அல்ஆஸார்-அஷ்ஷைபானீ-, ஃபளாஇலுல் குர்ஆன்-அபூஉபைத்(காஸிம்)-1/61 , அர்ரத்து-இப்னு மன்தஹ்-12 ,

அம்ர் பின் அபூகைஸ் (இவர் வழியாக வரும் செய்தி நபியின் சொல்லாகவும், நபித்தோழரின் சொல்லாகவும் வந்துள்ளது)

  • ஹாமித் பின் மஹ்மூத் —> அப்துர்ரஹ்மான் அத்தஷ்தகீ —> அம்ர் பின் அபூகைஸ் —> ஆஸிம் பின் அபுன்னஜூத் —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி).

பார்க்க: ஹாகிம்-2080 , ஷுஅபுல் ஈமான்-1833 ,

  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் யஃகூப் —> அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தஷ்தகீ —> அப்துர்ரஹ்மான் அத்தஷ்தகீ —> அம்ர் பின் அபூகைஸ் —> ஆஸிம் பின் அபுன்னஜூத் —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) —> நபி (ஸல்).

பார்க்க: ஹாகிம்-2080 , ஷுஅபுல் ஈமான்-1833 ,

  • அப்துர்ரஹ்மான் அத்தஷ்தகீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹாமித் பின் மஹ்மூத் (ஹாமித் பின் மஹ்மூத் பின் ஹர்ப்-அபூஅலீ அல்முக்ரி)  என்பவரை, கலீலீ, கதீப் பஃக்தாதீ ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். ஆனால் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தஷ்தகீ என்பவர் மக்பூல் (தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது) எனும் தரத்தில் உள்ளவர் ஆவார்.

(நூல்: அத்தத்யீலு அலா குதுபில் ஜர்ஹி வத்தஃதீல்-178 (1/64), தக்ரீபுத் தஹ்தீப்-, 2/373)

இதன்பிரகாரம் இந்தச் செய்தியை நபித்தோழரின் கூற்று என்றே முடிவு செய்ய வேண்டும்.

7 . ஸயீத் பின் ஜுபைர்.

  • ஸயீத் பின் ஜுபைர் —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) —> நபி (ஸல்).

பார்க்க: அர்ரத்து-இப்னு மன்தஹ்-10 ,

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36-அபான் பின் அபூஅய்யாஷ் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/55, தக்ரீபுத்தக்ரீப்-1/103)

(8 . அப்துல்மலிக் பின் மைஸரா.

  • அப்துல்மலிக் பின் மைஸரா —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: தாரிமீ-3365)

2 . அபூஉபைதா (ஆமிர் பின் அப்துல்லாஹ்). (இவரிடமிருந்து 2 பேர் அறிவித்துள்ளனர்)

  • அப்துல்கரீம் அல்ஜஸரீ —> அபூஉபைதா —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5993 , அல்முஃஜமுல் கபீர்-8647 , அர்ரத்து-இப்னு மன்தஹ்-16 ,

  • கைஸ் பின் ஸகன் —> அபூஉபைதா —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: ஃபளாஇலுல் குர்ஆன்-அல்ஃபிர்யாபீ-62 , …, அர்ரத்து-இப்னு மன்தஹ்-15 ,

  • இதன் அறிவிப்பாளர்தொடர்களில் வரும் ராவீ-20530-அபூஉபைதா (ஆமிர் பின் அப்துல்லாஹ்) அவர்கள், தனது தந்தை இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களைக் கேட்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/268, தக்ரீபுத் தஹ்தீப்-1/1174)

3 . அல்கமா அல்லது அஸ்வத்.

  • அல்கமா அல்லது அஸ்வத் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29935 ,

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18458-ஸுலைமான் பின் கர்ம் பின் முஆத் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/105, தக்ரீபுத் தஹ்தீப்-1/411)

4 . முஹம்மது பின் கஅப் அல்குரழீ.

  • முஹம்மது பின் கஅப் அல்குரழீ —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) —> நபி (ஸல்).

பார்க்க: தாரீகுல் கபீர்-679 (1/216) , திர்மிதீ-2910 , ஷுஅபுல் ஈமான்-1831 , அர்ரத்து-இப்னு மன்தஹ்-14 ,

  • முஹம்மது பின் கஅப் அல்குரழீ —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: அர்ரத்து-இப்னு மன்தஹ்-25 , 26 ,

  • இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-42217-முஹம்மது பின் கஅப் அவர்கள் ஹிஜ்ரீ 40 இல் பிறந்தார். இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 32 (அல்லது 33) லேயே இறந்துவிட்டார். எனவே முஹம்மது பின் கஅப் அவர்கள், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால் இவை பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களாகும்.

(அல்இஸாபா-8574 (10/522), தஹ்தீபுத் தஹ்தீப்-3/684)

5 . காஸிம் பின் அப்துர்ரஹ்மான்.

  • அலீ பின் ஸைத்  —> காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: அர்ரத்து-இப்னு மன்தஹ்-17 ,

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-29905-அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், ஆதாரம்கொள்ளத்தக்கவர் அல்ல என்றும் விமர்சித்துள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/162, தக்ரீபுத் தஹ்தீப்-4768)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

6 . உஸைர்-யஸீர் பின் அம்ர்.

  • உஸைர் (யஸீர் பின் அம்ர்) —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: அர்ரத்து-இப்னு மன்தஹ்-18 ,

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16844-ஸரிய்யு பின் ஆஸிம் அல்ஹம்தானீ என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: லிஸானுல் மீஸான்-4/22)

7 . அபுல்பக்தரீ.

  • அபுல்பக்தரீ —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: அக்லாகு அஹ்லில் குர்ஆன்-12 ,

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17564-ஸயீத் பின் ஃபைரோஸ்-இப்னு அபூஇம்ரான் (அபுல்பக்தரீ) அவர்கள், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது முர்ஸல் என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/38, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/154)

2 . அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.