தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-413

A- A+


ஹதீஸின் தரம்:


பாடம்:

மறுமை நாளில் முதன் முதலாக அடியார்கள் விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றி தான் என்று வந்துள்ள செய்திகள்.

ஹுரைஸ் பின் கபீஸா என்பவர் கூறியதாவது:

நான் மதீனாவிற்கு (பயணித்து) சென்றேன். அப்போது அல்லாஹ்வே! எனக்கு நல்ல சபைத்தோழர் கிடைப்பதை எளிதாக்குவாயாக! என்று பிரார்த்தனை செய்தேன். (பிறகு) நான் அபூஹுரைரா (ரலி) அவர்களின் சபைக்கு சென்று அமர்ந்து, (அபூஹுரைரா அவர்களே!) நான், எனக்கு நல்ல சபைத்தோழர் கிடைப்பதை எளிதாக்குவாயாக! என்று  அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வந்துள்ளேன். எனவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செவியேற்ற ஒரு ஹதீஸை எனக்கு அறிவியுங்கள்; அதன் மூலம் அல்லாஹ் எனக்கு பயனளிப்பான் என்று கூறினேன்.

அப்போது அவர்கள், “(மறுமையில்) அடியான் முதன் முதலில் விசாரிக்கப்படுவது அவனுடைய தொழுகையைப் பற்றித் தான். அது சரியாக இருந்தால் அவன் வெற்றி பெறுவான். அது சீர்கெட்டு இருந்தால் அவன் நட்டமடைந்துவிடுவான்.

அவனது கடமையான தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ், மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா! பாருங்கள்! என்று கூற, அவ்வாறே பார்க்கப்பட்டு (உபரியான வணக்கங்கள் இருந்தால் அவனுடைய கடமையான தொழுகை) நிறைவாக்கப்படும். இவ்வாறே மற்ற அமல்கள் விசயத்திலும் நிறைவாக்கப்படும் ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

(திர்மதி: 413)

بَابُ مَا جَاءَ أَنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ العَبْدُ يَوْمَ القِيَامَةِ الصَّلَاةُ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ نَصْرِ بْنِ عَلِيٍّ الجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ: حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ الحَسَنِ، عَنْ حُرَيْثِ بْنِ قَبِيصَةَ، قَالَ:

قَدِمْتُ المَدِينَةَ، فَقُلْتُ: اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا، قَالَ فَجَلَسْتُ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقُلْتُ: إِنِّي سَأَلْتُ اللَّهَ أَنْ يَرْزُقَنِي جَلِيسًا صَالِحًا، فَحَدِّثْنِي بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَلَّ اللَّهَ أَنْ يَنْفَعَنِي بِهِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ العَبْدُ يَوْمَ القِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ، فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ، وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ،

فَإِنْ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ، قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ: انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنَ الفَرِيضَةِ، ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ

وَفِي البَابِ عَنْ تَمِيمٍ الدَّارِيِّ،: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَقَدْ رَوَى بَعْضُ أَصْحَابِ الحَسَنِ، عَنِ الحَسَنِ، عَنْ قَبِيصَةَ بْنِ حُرَيْثٍ، غَيْرَ هَذَا الحَدِيثِ وَالمَشْهُورُ هُوَ قَبِيصَةُ بْنُ حُرَيْثٍ»، وَرُوِي عَنْ أَنَسِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوُ هَذَا


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-378.
Tirmidhi-Shamila-413.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-378.




மேலும் பார்க்க: நஸாயீ-465 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.