தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-514

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காருவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் (ரலி)

(திர்மதி: 514)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، وَالْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، قَالَا: حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ المُقْرِئُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ قَالَ: حَدَّثَنِي أَبُو مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ، عَنْ أَبِيهِ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الحِبْوَةَ يَوْمَ الجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ»

«وَهَذَا حَدِيثٌ حَسَنٌ»، «وَأَبُو مَرْحُومٍ اسْمُهُ عَبْدُ الرَّحِيمِ بْنُ مَيْمُونٍ» وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ العِلْمِ الحِبْوَةَ يَوْمَ الجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ، وَرَخَّصَ فِي ذَلِكَ بَعْضُهُمْ مِنْهُمْ: عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَغَيْرُهُ، وَبِهِ يَقُولُ أَحْمَدُ، وَإِسْحَاقُ لَا يَرَيَانِ بِالحِبْوَةِ وَالإِمَامُ يَخْطُبُ بَأْسًا


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-514.
Tirmidhi-Shamila-514.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-472.




إسناد ضعيف فيه سهل بن معاذ الجهني وهو ضعيف الحديث (جوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர் தொடரில் ராவீ-18777-ஸஹ்ல் பின் முஆத் பின் அனஸ் என்பவர் இடம் பெற்றுள்ளார்.
  1. இவருடைய அறிவிப்பை இமாம் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

حدثنا عبد الرحمن انا أبو بكر بن ابى خيثمة فيما كتب إلى قال سمعت يحيى بن معين يقول: سهل بن معاذ بن انس عن ابيه ضعيف. (الجرح والتعديل)  

  • ஸஹ்ல் பின் முஆத் பின் அனஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பவை பலவீனமானவை என இமாம் யஹ்யா இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    விமர்சித்துள்ளார்கள்.

(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 4, பக்.203)

  • மேற்கண்ட செய்தி இவர் தனது தந்தை வழியாக அறிவிக்கின்ற செய்தியாகும். எனவே இமாம் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களின் விமர்சனத்தின் அடிப்படையில் இது பலவீனமானதாகும்.

2. இமாம் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களும் இவரை விமர்சித்துள்ளார்கள்.

سهل بن معاذ بن أنس ، يروى عن أبيه روى عنه زبان بن فائد منكر الحديث جدا (المجروحين 1/ 347)

  • ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் ஹதீஸ் துறையில் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவர் ஆவார்.

(நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம் 1, பக்கம் 347)

எனவே ஸஹ்ல் பின் முஆத் இடம் பெற்றுள்ள மேற்கண்ட அறிவிப்பு பலவீனமானது என்பதில் சந்தேகமில்லை.

  • மேலும் மேற்கண்ட செய்தியில் அபூமர்ஹும் என்பாரும் இடம் பெற்றுள்ளார். இவருடைய பெயர் அப்துர் ரஹீம் பின் மைமூன் என்பதாகும். இவரைப் பற்றி அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

قال ابن أبي خيثمة عن ابن معين ضعيف الحديث وقال أبو حاتم يكتب حديثه ولا يحتج به وقال الذهبي فيه لين

1 . இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
விமர்சித்துள்ளார்.

2 . மேலும் இவருடைய ஹதீஸ்கள் எழுதப்படும். ஆனால் அவை ஆதாரமாகக் கொள்ளப்படாது என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்பாகம் : 2, பக்கம் 354)

3 . இவர் பலவீனமானவர் என இமாம் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

(நூல்: அல்காஷிஃப், பாகம்: 1, பக்கம் 650)


இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

1 . பார்க்க : அஹ்மத்-15630 , அபூதாவூத்-1110 , திர்மிதீ-514 , முஸ்னத் அபீ யஃலா-1492 , 1496 , இப்னு குஸைமா-1815 , அல்முஃஜமுல் கபீர்-384 , 385 , ஹாகிம்-1069 , குப்ரா பைஹகீ-5912 , 5913 ,

2 . இப்னு மாஜா-1134 ,


கூடுதல் தகவல் பார்க்க: ஜும்மாவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா.? .

மறைவிடம் தெரியும் வகையில் இவ்வாறு அமர்வதை நபி (ஸல்)  தடை செய்துள்ளார்கள்.

(பார்க்க: புகாரி-584 )

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.