தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-659

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

செல்வத்தில் ஸகாத் அல்லாத கடமைகளும் உள்ளன.

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸகாத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “செல்வத்தில் ஸகாத் அல்லாத (ஏனைய) கடமைகளும் இருக்கிறது என்று கூறினார்கள்.

பின்பு, “உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்” எனும் (அல்குர்ஆன் 2:177) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

(திர்மதி: 659)

بَابُ مَا جَاءَ أَنَّ فِي المَالِ حَقًّا سِوَى الزَّكَاةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مَدُّوَيْهِ قَالَ: حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، قَالَتْ:

سَأَلْتُ، أَوْ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الزَّكَاةِ؟ فَقَالَ: «إِنَّ فِي المَالِ لَحَقًّا سِوَى الزَّكَاةِ»، ثُمَّ تَلَا هَذِهِ الآيَةَ الَّتِي فِي البَقَرَةِ: {لَيْسَ البِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ} [البقرة: 177] الآيَةَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-596.
Tirmidhi-Shamila-659.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-595.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46059-மைமூன் அல்அஃவர்-அபூஹம்ஸா என்பவர் பலவீனமானவர் என பல ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/200)

  • இந்த செய்தி ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
    இறப்பு ஹிஜ்ரி 103 / 106
    அவர்களின் சொல் என்பதே உண்மை என திர்மிதீ இமாம் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க: திர்மிதீ-660 )

இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர் பலவீனமாக இருந்தாலும்  மேற்கண்ட சில குர்ஆனின் வசனங்களும், ஹதீஸ்களையும் பார்க்கும் போது இந்தக் கருத்து சரியானது என தெரிந்துக்கொள்ளலாம்.

  • இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 456
    வயது: 72
    அவர்கள், செல்வத்தில் ஸகாத் என்ற கடமையைத் தவிர வேறு கடமை இல்லை என்று கூறுவோரின் கருத்தை மறுத்து பதிலளித்துள்ளார்.

(நூல்: அல்முஹல்லா-4/152)

1 . இந்தக் கருத்தில் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரிமீ-1677 , இப்னு மாஜா-1789 , திர்மிதீ-659 , 660 , ஷரஹ் மஆனில் ஆஸார்-3043 , அல்முஃஜமுல் கபீர்-979 , 980 , தாரகுத்னீ-1952 , 1953 , 2016 , 2017 , குப்ரா பைஹகீ-7242 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.