தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-994

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

நல்ல கஃபன் ஆடை.

நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(திர்மதி: 994)

بَابُ مَا يُسْتَحَبُّ مِنَ الأَكْفَانِ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«البَسُوا مِنْ ثِيَابِكُمُ البَيَاضَ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»

وَفِي البَاب عَنْ سَمُرَةَ، وَابْنِ عُمَرَ، وَعَائِشَةَ: «حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَهُوَ الَّذِي يَسْتَحِبُّهُ أَهْلُ العِلْمِ»، وقَالَ ابْنُ المُبَارَكِ: «أَحَبُّ إِلَيَّ أَنْ يُكَفَّنَ فِي ثِيَابِهِ الَّتِي كَانَ يُصَلِّي فِيهَا»، وقَالَ أَحْمَدُ، وَإِسْحَاقُ: «أَحَبُّ الثِّيَابِ إِلَيْنَا أَنْ يُكَفَّنَ فِيهَا البَيَاضُ، وَيُسْتَحَبُّ حُسْنُ الكَفَنِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-915.
Tirmidhi-Shamila-994.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-913.




إسناده حسن في المتابعات والشواهد رجاله ثقات عدا عبد الله بن عثمان القاري وهو مقبول

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் உஸ்மான் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

استشهد به البخاري في ” الصحيح ”
تهذيب الكمال: (15 / 279)

2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)

கஃபன் ஆடை பற்றி…

பார்க்க : இப்னு மாஜா-14723566 , திர்மிதீ-994 ,

சுர்மா பற்றி…

பார்க்க: அஹ்மத்-2047, இப்னு மாஜா-3497 , நஸாயீ-5113 ,

இரண்டும்…

பார்க்க: அஹ்மத்-2219 , 2479 , 3035 , 3342 , 3426 , அபூதாவூத்-38784061 ,

  • அப்பாத் பின் மன்ஸூர் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-3318 , 3320 , இப்னு மாஜா-3499 , திர்மிதீ-1757 , 2048 ,

  • ஹிஷாம் பின் ஸியாத்…—> அதாஉ —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4795 , 5156 ,

  • லைஸ் —> முஜாஹித் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8340 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-2810 .

3 comments on Tirmidhi-994

  1. இவரது செய்தி நிராகரிக்கப்பட்டது என்று அலி இப்னு மதீனீ கூறுகிறார்கள்

    இவரை பலவீனமானவர் என்று தாருகுத்னீ கூறுகிறார்கள்

    இவர் தவறு செய்ய கூடியவர் என்று அபுஹாத்தீம் கூறுயுள்ளார்கள்

    இவர் பலவீனமான நினைவாற்றல் கொண்டவர் என்று இமாம் தஹவி கூறியுள்ளார்கள்

    இமாம் நஸாயீ அவர்கள் ஒரு முறை நம்பிக்கைகுரியவர் என்றும் ,மற்றோரு முறை பலவீனமானவர் என்றும கூறுகிறார்கள்

    இமாம் இப்னு ஹிப்பான் இவரை நம்பிக்கையாளர் பட்டியலில் சேர்த்துள்ளார்கள்

    இப்னு உபை இவரது ஹதீஸ் ஹஸன் தரத்தை அடையும் என்று கூறுகிறார்கள்

    தர்கீப் அல் தஹ்தீப்-5/313

    மேலும்,யஹ்யா இப்னு மயீன் மற்றும் இஜ்லி ஆகியோர் பலமானவர் என்று கூறுகிறார்கள்

    நூல்- லிஸான் அல் மீஸான்

    மற்றோரு முறை இவரது செய்திகள் பலமானது அல்ல என்று யஹ்யா இப்னு மயீன் கூறுகிறார்கள்

    இவர் சதூக் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுகிறார்கள்

    தர்கீப் அல் தஹ்தீப்-313

    இப்னு அப்பாஸ் வழியாக வரும் செய்தி ஹஸன் ஸஹீஹ் என்று இமாம் திர்மிதீ கூறியுள்ளார்கள்

    இது சரியான செய்தி என்று அல்பானி அவர்கள் கூறிகிறார்கள்

    அஹ்கம் அல் ஜனாஸா-82

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.